குல்தீப் யாதவ் படம் | AP
கிரிக்கெட்

ஷேன் வார்னேவின் மறைவு குறித்து பேசிய குல்தீப் யாதவ்!

முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னேவின் இழப்பு தனது குடும்பத்தில் ஒருவரை இழந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியதாக குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

DIN

முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னேவின் இழப்பு தனது குடும்பத்தில் ஒருவரை இழந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியதாக இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் அவரது குடும்பத்தினருடன் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின்போது, ஷேன் வார்னேவின் சொந்த மைதானமான மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்துக்கு குல்தீப் யாதவ் சென்றுள்ளார். அங்கு மைதானத்தின் வெளியே வைக்கப்பட்டுள்ள ஷேன் வார்னேவின் சிலையுடன் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்துக்கு சென்ற குல்தீப் யாதவ் பேசியதாவது: ஷேன் வார்னே எனக்கு முன்மாதிரியாக (ரோல்மாடல்) இருந்தார். அவருடன் எனக்கு சிறப்பான நட்பு இருந்தது. ஷேன் வார்னே குறித்து யோசிக்கும்போது, என்னுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. ஷேன் வார்னேவின் இழப்பு என்னுடைய குடும்பத்தில் ஒருவரை இழந்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது என்றார்.

ஷேன் வாா்னே

ஆஸ்திரேலிய அணியின் அசைக்க முடியாத சுழற்பந்துவீச்சாளராக வலம் வந்த ஷேன் வார்னே கடந்த 2022 ஆம் ஆண்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லையில் 2 நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த டிரம்ப் உத்தரவு!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

SCROLL FOR NEXT