ஷிகர் தவான் படம் | ஐசிசி
கிரிக்கெட்

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் இணையும் ஷிகர் தவான்!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு முடிவை அறிவித்த ஷிகர் தவான் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் இணைந்துள்ளார்.

DIN

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு முடிவை அறிவித்த ஷிகர் தவான் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் இணைந்துள்ளார்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ஷிகர் தவான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து அண்மையில் ஓய்வு பெற்றார். அவருக்கு முன்னாள் மற்றும் தற்போது அணியில் இடம்பெற்று விளையாடி வரும் கிரிக்கெட் வீரர்கள் எனப் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், ஷிகர் தவான் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் இணைந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது நான் விரும்பி எடுத்த முடிவே. கிரிக்கெட் விளையாடுவதற்கு என்னுடைய உடல் இன்னும் ஒத்துழைக்கிறது. கிரிக்கெட் என்னுடைய வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒரு விஷயமாக உள்ளது. என்னிடமிருந்து ஒருபோதும் கிரிக்கெட் விலகிச் செல்லாது. எனது கிரிக்கெட் நண்பர்களுடன் இணைய ஆர்வமாக இருக்கிறேன். என்னுடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமான புதிய நினைவுகளை உருவாக்கவுள்ளேன் என்றார்.

இந்திய அணிக்காக ஷிகர் தவான் 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிக செலவில் போடப்பட்ட தோட்டா தரணி செட் இதுதானாம்!

ராப் பாடகர் வேடன் மருத்துவமனையில் அனுமதி! இசை நிகழ்ச்சி ஒத்திவைப்பு!

விஜய் உடன் சந்திப்பு! செங்கோட்டையனுக்கு அமைப்புப் பொதுச் செயலாளர் பதவி?

செண்பகமே செண்பகமே... ரித்விகா!

தேனில் குளித்ததைப் போல... ஆஷி சாஹ்னி!

SCROLL FOR NEXT