மிட்செல் ஸ்டார்க், ஜெய்ஸ்வால்.  படம்: ஏபி
கிரிக்கெட்

ஜெய்ஸ்வால் வம்பிழுத்தது குறித்து மனம்திறந்த மிட்செல் ஸ்டார்க்!

முதல் டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் தன்னை கிண்டல் செய்தது குறித்து தற்போது ஸ்டார்க் பேட்டியளித்துள்ளார்.

DIN

பார்டர் - கவாஸ்கர் தொடரில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதல் டெஸ்ட்டில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலியாவின் மூத்த வீரரும் வேகப் பந்துவீச்சாளருமான மிட்செல் ஸ்டார்க் ஓவரில் அதிரடியாக விளையாடியது மட்டுமல்லாமல் 142 கி.மீ/மணி வேகத்தில் வீசிய ஸ்டார்க்கிடம், “உங்களது பந்து மிக மெதுவாக வருகிறது” எனக் கூறினார்.

பொதுவாகவே ஆஸ்திரேலியர்கள்தான் மற்றவர்களை வம்பிழுப்பார்கள் என்ற நிலையில் இளம் இந்தியர் ஒருவர் மூத்த வீரரை கிண்டல் செய்தது கிரிக்கெட் உலகில் பேசுபொருளானது.

இது குறித்து அலைஸ்டர் குக் ஜெய்ஸ்வாலுக்கு தைரியம் அதிகம் எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் இது குறித்து கூறியதாவது:

ஜெய்ஸ்வால் கூறியது எனக்கு கேட்கவில்லை. இந்த நாள்களில் நான் பெரிதாக மற்றவர்களிடம் எதுவும் சொல்வதில்லை. முன்பு சொல்லியிருக்கிறேன். தற்போது, அதையெல்லாம் குறைத்துக் கொண்டேன். ஒரு ஃபிலிக் ஷாட் அடித்தார். நான் அதேமாதிரி இன்னொரு பந்தினை வீசினேன். அவர் அதை டிஃபெண்ட் செய்தார். நான் ‘ஏன் ஃபிலிக் அடிக்கவில்லை’ எனக் கேட்டேன். ஜெய்ஸ்வால் சிரித்தார். நாங்கள் அத்துடன் அதை விட்டுவிட்டோம்.

இந்தியாவுக்காக வெற்றிகரமாக விளையாடி வருகிறார் ஜெய்ஸ்வால். 2ஆவது இன்னிங்ஸில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார். முதல் டெஸ்ட்டிலே சிறப்பாக சூழநிலைக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக்கொண்டார். முதல் இன்னிங்ஸில் நாங்கள் டக் அவுட் செய்தோம். ஆனால். 2ஆவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடினார். அதனால் அவருக்கு எனது பாராட்டுகள்.

உலகத்திலேயே பயமறியா இளம் அதிரடி வீரர்களில் ஜெய்ஸ்வாலும் ஒருவர் எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.232 கோடி மோசடி! இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் மேலாளர் கைது!

"வரிகள் நீக்கப்பட்டால் அமெரிக்காவிற்கு பேரழிவு!": Trump எச்சரிக்கை! | Tax | Federal Court of US

முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள்: வெள்ளை அறிக்கை எப்போது வெளியாகும்? - நயினார் நாகேந்திரன்

26 ஆண்டுகளுக்குப் பின்..! இளைஞரின் நுரையீரலில் இருந்த பேனா மூடியை அகற்றிய மருத்துவர்கள்!

சீனாவில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT