இந்திய வீரர் விராட் கோலி மீண்டும் அவுட்சைட் ஆஃப் பந்தில் ஆட்டமிழந்தது குறித்து முன்னாள் வீரர் விமர்சித்துள்ளார்.
பார்டர் கவாஸ்கர் தொடரின் 2ஆவது டெஸ்ட்டில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தெர்வு செய்தது. 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் கோல்டன் டக் அவுட்டானார். அடுத்து 4ஆவதாக களமிறங்கிய விராட் மிட்செல் ஸ்டார் வீசிய ஆஃப் செடு பந்தில் ஆட்டமிழந்தார். விராட் கோலி பலமுறை இந்த மாதிரி ஆட்டமிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அடிலெய்டில் 63க்கும் அதிகமாக சராசரி வைத்துள்ள விராட் கோலி இந்தமுறை 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இது குறித்து முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
அவுட்சைட் ஆஃப் பலவீனத்தினால்தான் விராட் கோலியின் சராசரி 48க்கும் கீழ் குறைந்துள்ளது. முக்கியமாக விராட் கோலி அதைவிட்டு வேறு வழியை முயற்சிக்காமல் அடம்பிடிக்கிறார் எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.