முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. 2ஆவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் 280 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து சார்பில் ஹாரி புரூக் சதமடித்தார். 123 ரன்களில் இருக்கும்போது ரன் -அவுட் ஆனார். ஆலி போப் 66 ரன்கள் சேர்த்தார். மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தார்கள்.
நியூசி சார்பில் நாதன் ஸ்மித் 4, வில்லியம் ரூர்கே 3 விகெட்டுகளும் எடுத்து அசத்தினார்கள்.
அடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் நியூசிலாந்து அணி 79க்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இங்கிலாந்து சார்பில் பிரைடன் கர்ஸ் 2, ஸ்டோக்ஸ் 1, ஓக்ஸ், அட்கின்ஸன் தலா 1 விக்கெட்டும் எடுத்தார்கள்.
நியூசிலாந்து அணி 24 ஓவர்களில் 84/5 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் வில்லியம் ரூர்கே, டாம் பிளண்டல் விளையாடி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.