கோப்புப் படம் படம் | AP
கிரிக்கெட்

பிங்க் பந்தினை இந்தியா சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை; முன்னாள் கேப்டன் அதிருப்தி!

பிங்க் பந்தினை இந்திய அணி சரியாக பயன்படுத்திக் கொள்ளாதது ஏமாற்றமளிப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார்.

DIN

பிங்க் பந்தினை இந்திய அணி சரியாக பயன்படுத்திக் கொள்ளாதது ஏமாற்றமளிப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று (டிசம்பர் 6) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக நிதீஷ் குமார் ரெட்டி 54 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கே.எல்.ராகுல் 37 ரன்களும், ஷுப்மன் கில் 31 ரன்களும் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் ஸ்காட் போலாண்ட் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 86 ரன்கள் எடுத்து அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

முன்னாள் கேப்டன் அதிருப்தி

இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் பிங்க் பந்தினை சரியாக பயன்படுத்திக் கொள்ளாதது அதிருப்தியளிப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

சுனில் கவாஸ்கர்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி அதனால் முடிந்த அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். முதல் டெஸ்ட்டில் நாதன் மெக்ஸ்வீனி மற்றும் லபுஷேனின் விக்கெட்டினை பும்ரா சிறப்பாக பந்துவீசி வீழ்த்தினார். இந்திய பந்துவீச்சாளர்கள் அவ்வாறு இந்த போட்டியிலும் ஆஸ்திரேலியாவுக்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். உண்மையில், பிங்க் பந்தினை இந்திய பந்துவீச்சாளர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பற்றி எரியும் இந்தோனேசியா... நாடாளுமன்றக் கட்டடத்துக்கு தீ வைப்பு! 3 பேர் பலி!

உ.பி.: மது அருந்திய 2 பேர் பலி, ஒருவர் கவலைக்கிடம்!

அதீத வெப்பம்: தாமதமாக நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள்!

மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: மும்பையில் போலீஸாரின் விடுமுறைகள் ரத்து

லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாகும் ரச்சிதா ராம்?

SCROLL FOR NEXT