ஜேபி டுமினி படம் | தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்
கிரிக்கெட்

தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் விலகல்; காரணம் என்ன?

தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக ஜேபி டுமினி தெரிவித்துள்ளார்.

DIN

தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக ஜேபி டுமினி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங் பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் வீரரான ஜேபி டுமினி தென்னாப்பிரிக்க அணியுடன் இணைந்தார். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங் பயிற்சியாளராக அவர் செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஜேபி டுமினி விலகுவதாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அணியின் பயிற்சியாளராக இணைந்தது முதல் ஜேபி டுமினி, தென்னாப்பிரிக்க அணியின் வளர்ச்சிக்கு மிகுந்த பங்காற்றியுள்ளார். தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங் பயிற்சியாளராக அணிக்கு அவர் அளித்த பங்களிப்பு விலைமதிப்பற்றது. குறுகிய வடிவிலான போட்டிகளுக்கான அடுத்த பயிற்சியாளருக்கான தேடலை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தொடங்கியுள்ளது. விரைவில் அது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்க அணிக்காக கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை 15 ஆண்டுகளாக 46 டெஸ்ட், 199 ஒருநாள் மற்றும் 81 டி20 போட்டிகளில் ஜேபி டுமினி விளையாடியுள்ளார்.

தென்னாப்பிரிக்க அணி அதன் சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. அதனைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்க அணி பாகிஸ்தானுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

SCROLL FOR NEXT