ஸ்டீவ் ஸ்மித் படம்: ஏபி
கிரிக்கெட்

9 ஆண்டுகளுக்குப் பிறகு டாப் 10 தரவரிசையில் கீழிறங்கிய ஸ்டீவ் ஸ்மித்..! மீண்டு வருவாரா?

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்டர் ஸ்டீவ் ஸ்மித் 9 ஆண்டுகளுக்குப் பிறகு டாப் 10 தரவரிசையில் இருந்து கீழிறங்கியுள்ளார்.

DIN

ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த டெஸ்ட் பேட்டரான ஸ்டீவ் ஸ்மித் பும்ரா ஓவரில் முதல் டெஸ்ட்டில் முதல்முறையாக சொந்த மண்ணில் கோல்டன் டக் அவுட் ஆகி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் மோசமாக விளையாடி வருகிறார்.

111 டெஸ்ட் போட்டிகளில் 9,704 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த ஓராண்டாக ஃபார்மில் இல்லாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது, சராசரி 56.09ஆக இருக்கிறது. இதற்கு முன்பு 64 சராசரியுடன் விளையாடியுள்ளார்.

இந்த நிலையில் ஐசிசி தரவரிசையில் 11ஆவது இடத்துக்கு கீழிறங்கியுள்ளார். 2015இல் இருந்து முதல்முறையாக டாப் 10இல் இருந்து கீழிறங்கியுள்ளது.

தற்போது, விளையாடும் பேட்டர்களிலேயே அதிகபட்ச 947 புள்ளிகள் பெற்று அசத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டான் பிராட்மேன் அதிகபட்சமாக 961 புள்ளிகள் பெற்று டெஸ்ட்டில் ஐசிசி ஆல்டைம் தரவரிசையில் முதலிடத்தில் நீடிப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்டீவ் ஸ்மித் மீண்டுவந்து பிராட்மேன் சாதனையை முறியடிப்பாரா என ஆஸ்திரேலிய ரசிகர்களும் கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

சீா்காழி: வாகனத்தில் டீசல் திருட்டு

SCROLL FOR NEXT