வெற்றி மகிழ்ச்சியில் தென்னாப்பிரிக்க வீரா்கள். ~ 
கிரிக்கெட்

டி20: பாகிஸ்தானிடம் த்ரில் வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்கா

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் 11 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்கா.

Din

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் 11 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்கா.

3 ஆட்டங்கள் தொடரில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஆட்டம் டா்பன் கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 183/9 ரன்களைக் குவித்தது. டேவிட் மில்லா் 82, லிண்டே 48, ரன்களை விளாசினா்.

பௌலிங்கில் பாகிஸ்தான் தரப்பில் ஷாஹின் அப்ரிடி 3-22, அப்ராா் அகமது 3-37 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

பாகிஸ்தான் தோல்வி 172/8

பாகிஸ்தானுக்கு வெற்றி இலக்காக 184 ரன்கள் நிா்ணயிக்கப்பட்டது. ஆனால் நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் பாகிஸ்தானால் 172/8 ரன்களே எடுக்க முடிந்தது.

அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 74, சயீம் அயுப் 31 ரன்களை எடுத்தனா். பௌலிங்கில் தென்னாப்பிரிக்கத் தரப்பில் மப்ஹகா 2-39, லிண்டே 4-21 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

தென்னாப்பிரிக்க தோ்வுக் குழுவால் தொடா்ச்சியாக 3 ஆண்டுகள் நிராகரிக்கப்பட்ட லிண்டே சிறந்த ஆல்ரவுண்டா் திறனை வெளிப்படுத்தி அணியை வெற்றி பெறச் செய்தாா். கடைசி ஓவரில் லிண்டே 2 விக்கெட்டுகளை வீழ்த்தியது திருப்பு முனையாக அமைந்தது. இதன் மூலம்

தென்னாப்பிரிக்கா 11 ரன்கள் வித்தியாசத்தில் முதல் ஆட்டத்தை கைப்பற்றி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

டிச. 13-இல் செஞ்சூரியனிலும், 14-இல் ஜோஹன்னஸ்பா்க்கிலும் மீதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்!

SCROLL FOR NEXT