நடுவரின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஆப்கன் வீரர் குல்பதீனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று (டிச.13) நடைபெற்ற டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் ஜிம்பாப்வே அணிகள் மோதின. இதில் ஆப்கானிஸ்தான் வென்று தொடரினை 1-1 என சமன்செய்தது.
இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தானின் ஆல் ரவுண்டர் குல்பதீன் நைப் ஐசிசியின் 2.8 விதியை மீறியதால் போட்டியின் ஊதியத்தில் இருந்து 15 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
போட்டி நடுவர் விதித்த அபராதத்தை ஆப்கன் வீரர் குல்பதீன் ஏற்றுக்கொண்டார். 3ஆவது டி20 யில் ஆப்கன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
குல்பதீன் செய்தது என்ன?
ஆப்கானிஸ்தான் பேட்டிங் விளையாடும்போது 11ஆவது ஓவரில் ரஷித் கான் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ கேட்கப்பட்டது. டிஆர்எஸ் இல்லாததால் நடுவரிடம் கை எடுத்து கும்பிட்டு ரிவிவ் எடுக்குமாறு நடுவரின் தீர்ப்புக்கு எதிராக செயல்பட்டார்.
இது குறித்து ஐசிசி, “விதி 2.8ஐ குல்பதீன் மீறியதால் அவருக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்படும்” எனக் கூறியது.
மேலும், ஒரு அபராதப் புள்ளியும் வழங்கப்பட்டது. கடந்த 24 மாதங்களில் இதுதான் அவரது முதல் அபராதப் புள்ளி என்பது குறிப்பிட்டத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.