ஆஸ்திரேலியாவின் கேப்டன் பாட் கம்மின்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
பிரிஸ்பேனில் நடைபெற்றுவரும் பார்டர் - கவாஸ்கர் தொடரின் 3ஆவது டெஸ்ட்டில் இந்திய வீரர்களான ரிஷப் பந்த், ரோஹித் சர்மா, நிதீஷ்குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா ஆகியோரது விக்கெட்டுகளை எடுத்தார்.
மொத்தமாக 283 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்துள்ள கம்மின்ஸ் கேப்டனாக 119 விக்கெட்டுகள் எடுத்து, அதிக விக்கெட்டுகள் எடுத்த கேப்டன்கள் வரிசையில் மூன்றாமிடம் பிடித்துள்ளார்.
3-ஆவது டெஸ்ட்டில் 4 விக்கெட்டுகள் எடுத்ததன் மூலம் மே.இ.தீவுகள் அணியின் லெஜண்டரி கேரிஃபீல்டு சோபர்ஸ், நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி ஆகியோரை முந்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கேப்டனாக அதிக டெஸ்ட் விக்கெட்டுகள்
1. இம்ரான் கான் - 187 (பாகிஸ்தான்)
2. ரிச்சி பெனௌத் 138 (ஆஸ்திரேலியா)
3. பாட் கம்மின்ஸ் - 119 (ஆஸ்திரேலியா)
4. கேரிஃபீல்டு சோபர்ஸ் - 117 (மே.இ.தீவுகள் )
5. டேனியல் வெட்டோரி - 116 (நியூசிலாந்து)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.