டிராவிஸ் ஹெட் 
கிரிக்கெட்

டிராவிஸ் ஹெட் காயம்! 4-வது டெஸ்ட்டில் விளையாடுவாரா?

ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட் காயத்தால் அவதி..

DIN

ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட் தொடையில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வருவதால், 4-வது போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற கேள்வி ரசிகர் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதிய 3-வது டெஸ்ட் போட்டியின் 5-வது நாள் மழையால் பாதிக்கப்பட்டதால் சமனில் முடித்துக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

252/9 ரன்களுக்கு 4ஆவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் இன்று(டிச.18) ஆட்டம் தொடங்கியதும் 4 ஓவர்களில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. டிராவிஸ் ஹெட்டின் பந்துவீச்சில் ஆகாஷ் தீப் 31 ரன்களில்ல் ஆட்டமிழந்தார். இதனால், இந்திய அணி 78.5 ஓவர்களில் 260 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.

2-வது இன்னிங்ஸில் 185 ரன்கள் முன்னிலையுடன் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு பும்ரா - ஆகாஷ் தீப் இருவரும் பந்துவீச்சிலும் நெருக்கடி கொடுத்தனர். ஆஸ்திரேலிய அணி முடிவில் 18 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்திருந்த போது கேப்டன் கம்மின்ஸ் டிக்ளேர் செய்தார்.

மோசமான வானிலையால் இந்திய அணியின் தொட்டக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக விளையாடி, வெற்றி அல்லது சமனில் முடித்து கொள்ளும் நிலையில் விளையாடினர்.

2.1 ஓவர்களில் இந்திய அணீ மோசமான வானிலை, குறைந்த வெளிச்சத்தால் முன்னதாகவே, தேநீர் இடைவேளை விடப்பட்டது.

போட்டி தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமனில் முடித்துக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

வருகிற டிசம்பர் 26 ஆம் தேதி பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நடைபெறவிருக்கிறது. ஏற்கனவே, ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஹேசில்வுட் விலகியுள்ளதால், டிராவிஸ் ஹெட் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் விளையாடுவாரா? இல்லையா? என்பது குறித்து அவர் கூறுகையில், “தான் நலமுடன் இருப்பதாகவும், டிச.26 ஆம் தேதி நடைபெறும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி விளையாடுவேன்.

தற்போது நான் பேட்டிங் செய்யும் விதம் எனக்கு பிடித்திருக்கிறது. கொஞ்சமாக வலி இருக்கிறது. ஆனாலும், நலமாகத் தான் இருக்கிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

30 வயதான டிராவிஸ் ஹெட் 81.80 சராசரியுடன் இந்தத் தொடரில் 409 ரன்கள் குவித்து முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலக்கு மட்டும்... சிம்ரன் சௌத்ரி

மாடர்ன் புறா... பிரியங்கா ஜவல்கர்

மும்பை: சொகுசு ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

போப் பதினான்காம் லியோவின் முதல் வெளிநாடு பயணம்! எங்கு தெரியுமா?

வலையில் சிக்கிய 150 கிலோ எடை ஆமை: கடலில் விட்ட மீனவர்

SCROLL FOR NEXT