இந்திய அணி படம்: ஏபி
கிரிக்கெட்

3ஆவது இடத்தில் இந்தியா: டபிள்யூடிசி இறுதிப்போட்டிக்கு செல்லுமா?

ஆஸி. உடனான 3ஆவது டெஸ்ட் சமனில் முடிந்ததால் டபிள்யூடிசி தரவரிசையில் மூன்றாமிடத்தில் நீடிக்கிறது இந்திய அணி.

DIN

பிரிஸ்பேனில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் 3ஆவது டெஸ்ட் போட்டி மழை சமனில் முடிந்தது. இந்திய அணி டபிள்யூடிசி தரவரிசையில் மூன்றாமிடத்தில் நீடிக்கிறது.

டபிள்யூடிசி (உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்) இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டுமானால் முதலிரண்டு இடங்களைப் பிடிக்க வேண்டும்.

பிரிஸ்பேனில் நடைபெற்ற டெஸ்ட் கடைசி நாளிலும் மழை குறுக்கிட்டதால் டிரா என அறிவிக்கப்பட்டது.

டபிள்யூடிசி தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி 2ஆம் இடத்திலும் தென்னாப்பிரிக்கா முதலிடத்திலும் நீடிக்கிறது.

இந்தியாவுக்கு வாய்ப்பு இருக்கிறதா?

1. மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு தகுதிபெற முடியும்.

2. ஆஸ்திரேலியா இந்தியாவுடன் 2 போட்டிகளிலும் வென்றுவிட்டால் இலங்கையுடன் தோல்வியுற்றாலும் அது இந்தியாவை பாதிக்காது.

3. இந்தியா 1 வெற்றி, 1 டிரா செய்தால், ஆஸி. இலங்கையுடனான ஒரு டெஸ்ட்டிலாவது டிரா செய்ய வேண்டும்.

டபிள்யூடிசி தரவரிசை

1. தென்னாப்பிரிக்கா - 63.33 புள்ளிகள்

2. ஆஸ்திரேலியா - 58.89 புள்ளிகள்

3. இந்தியா - 55.88 புள்ளிகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT