ரிஷப் பந்த் படம் | ஐசிசி
கிரிக்கெட்

முதல் அரைமணி நேரத்தை மதியுங்கள்; ரிஷப் பந்த்துக்கு முன்னாள் கேப்டன் அறிவுரை!

ஆட்டத்தின் முதல் அரைமணி நேரத்துக்கு ரிஷப் பந்த் மதிப்பு கொடுக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அவருக்கு அறிவுரை கூறியுள்ளார்.

DIN

ஆட்டத்தின் முதல் அரைமணி நேரத்துக்கு ரிஷப் பந்த் மதிப்பு கொடுக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அவருக்கு அறிவுரை கூறியுள்ளார்.

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மூத்த வீரர்கள், இளம் வீரர்கள் என அனைவரும் பெரிய அளவின் ரன்கள் குவிக்கத் தவறுகின்றனர். அதிரடி ஆட்டத்தின் மூலம் நன்கு அறியப்பட்ட ரிஷப் பந்த், அவருக்கு கிடைக்கும் நல்ல துவக்கத்தைப் பயன்படுத்தி பெரிய அளவில் ரன்கள் சேர்க்கத் தவறுகிறார்.

முதல் அரைமணி நேரத்தை மதியுங்கள்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் நாளை மறுநாள் தொடங்கவுள்ள நிலையில், ஆட்டத்தின் முதல் அரைமணி நேரத்துக்கு ரிஷப் பந்த் மதிப்பு கொடுக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அவருக்கு அறிவுரை கூறியுள்ளார்.

சுனில் கவாஸ்கர்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: மற்ற வீரர்களைப் போன்று ரிஷப் பந்த்தும் ஆட்டத்தின் முதல் அரைமணி நேரத்துக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். அவர் களமிறங்கும்போது இந்திய அணியின் நிலை எப்படி இருந்தாலும், முதல் அரைமணி நேரத்துக்கு அவர் சிறிது மதிப்பளிக்க வேண்டும். இந்திய அணி 525 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்தால், ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடலாம் என்றார்.

இதுவரை விளையாடிய மூன்று டெஸ்ட் போட்டிகளின் ஐந்து இன்னிங்ஸ்களில் ரிஷப் பந்த் 37, 1, 21, 28 மற்றும் 9 ரன்கள் முறையே குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT