தெ.ஆ. கேப்டன் டெம்பா பவுமா  
கிரிக்கெட்

டபிள்யூடிசி இறுதிப் போட்டிக்கான திட்டமிடலில் தென்னாப்பிரிக்கா..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இடம்பெறுமென தெ.ஆ. கேப்டன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

DIN

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா இடம்பெறுமென கேப்டன் டெம்பா பவுமா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தாண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா தகுதிபெற ஒரு போட்டியில் வென்றால் போதுமானது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் பாகிஸ்தான் அணி 7ஆவது இடத்தில் இருக்கிறது. மீதமுள்ள 2 போட்டிகளில் வென்றாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தேர்வாகாது.

நஸீம் ஷா, பாபர் அசாம் மீண்டும் பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

இது குறித்து தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா கூறியதாவது:

அழுத்தம் இருக்கிறது. ஆனால், உண்மையை சொல்ல வேண்டுமானால் நாங்கள் இந்தத் தொடரை 2-0 என வெல்லதான் வந்திருக்கிறோம்.

ஒரு அணியாக நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்பதை புரிந்து வைத்திருக்கிறோம். விஷயங்களை சாதாரணமாக வைத்துக்கொள்கிறோம். சிறிய விஷயங்களை சரியாக செய்தால் அதுவே முடிவினை பார்த்துக்கொள்ளும்.

டாப் ஆர்டர் வீரர்களிடம் பிரச்னை இருக்கிறது. அதை சரிசெய்ய வேண்டும். இது எளிதானதோ, கடினமானதோ தெரியவில்லை. ஆனால் அதற்கான வழியை கண்டறிய வேண்டும் என்றார்.

தென்னாப்பிரிக்காவில் 4 வேகப் பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். கோர்பின் போஸ்ஷ் தொடர்ச்சியாக 140 கி.மீ/ மணி வேகத்தில் பந்து வீசுகிறார்.

ககிசோ ரபாடா, மார்கோ யான்சென், டனே படேர்சன், போஸ்ஷ் பாகிஸ்தான் வீரர்களுக்கு சவாலாக இருப்பார்கள். சென்ட்சூரியன் திடலில் கடந்த 6 வருடங்களில் 227 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள். சுழல்பந்து வீச்சாளர்கள் வெறுமனே 16 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2 வாரங்களுக்கு முன்பு பாகிஸ்தான் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஜேசன் கில்லஸ்பி ராஜிநாமா செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் அதிகார யாத்திரையில் மோடி குறித்து அவதூறு! பாஜக கண்டனம்

பால்யகால சகி... ரவீனா தாஹா!

ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறினார் ஈரான் தூதர்!

2021 ராஜஸ்தான் போலீஸ் எஸ்ஐ தேர்வு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

பாதுகாப்பின்மை குறித்த அச்சத்தில் 40% கிராமப் பெண்கள் - ஆய்வு

SCROLL FOR NEXT