ஸ்டீவ் ஸ்மித் படம் | AP
கிரிக்கெட்

தனித்துவமான சாதனை பட்டியலில் இணைந்த ஸ்டீவ் ஸ்மித்!

ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தனித்துவமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

DIN

ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தனித்துவமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று (டிசம்பர் 26) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சாம் கொன்ஸ்டாஸ் (60 ரன்கள்), உஸ்மான் கவாஜா (57 ரன்கள்), மார்னஸ் லபுஷேன் (72 ரன்கள்) எடுத்தனர். ஸ்டீவ் ஸ்மித் 68 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

தனித்துவமான சாதனை

இந்தியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் டெஸ்ட் போட்டிகளில் தனது 42-வது அரைசதத்தை ஸ்டீவ் ஸ்மித் பூர்த்தி செய்தார்.

இதன் மூலம், தனித்துவமான புதிய சாதனை ஒன்றையும் அவர் படைத்துள்ளார். மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 10 அல்லது அதற்கும் மேற்பட்ட முறை டெஸ்ட் போட்டிகளில் அரைசதம் கடந்த ஆஸ்திரேலிய வீரர்களின் பட்டியலில் ஸ்டீவ் ஸ்மித்தும் இணைந்துள்ளார்.

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டீவ் ஸ்மித் 10-வது முறையாக அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். இதற்கு முன்பாக கிரேக் சேப்பல் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13 முறை அரைசதம் எடுத்துள்ளார். டான் பிராட்மேன் 11 போட்டிகளில் விளையாடி 12 அரைசதமும், ரிக்கி பாண்டிங் 15 போட்டிகளில் விளையாடி 11 அரைசதமும் எடுத்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது ஸ்டீவ் ஸ்மித்தும் இணைந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT