முகப்பு
கிரிக்கெட்

ஜெய்ஸ்வால் ரன் அவுட் ஆட்டத்தின் மிகப் பெரிய தருணம்: ஸ்டீவ் ஸ்மித்

யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் விக்கெட் ஆட்டத்தின் திருப்புமுனையாக இருக்கும் என ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 டிசம்பர் 2024, 4:26 pm IST
யஷஸ்வி ஜெய்ஸ்வால் - படம் | AP
பகிர்:

யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் விக்கெட் ஆட்டத்தின் திருப்புமுனையாக இருக்கும் என ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நேற்று (டிசம்பர் 26) தொடங்கியது.

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 474 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, மார்னஷ் லபுஷேன் (72 ரன்கள்), சாம் கொன்ஸ்டாஸ் (60 ரன்கள்), உஸ்மான் கவாஜா (57 ரன்கள்) எடுத்தனர்.

Advertisement

Advertisement

இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 82 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.

திருப்பு முனை

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வாலின் ரன் அவுட் ஆட்டத்தின் மிகப் பெரிய தருணம் என ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: விராட் கோலி இன்று மிகவும் சிறப்பாக விளையாடினார். அவர் பந்துகளை அருமையாக லீவ் செய்தார். அவர் லெக் திசையில் சிறப்பாக ரன்கள் குவித்தார். அவர் மிகவும் சிறப்பான ஆட்டத்தை இன்று வெளிப்படுத்தினார். ஜெய்ஸ்வால் ரன் ஓட அழைத்தார். ஆனால், விராட் கோலி அவரை வேண்டாம் என திருப்பியனுப்பினார். இதைத் தவிர்த்து ஜெய்ஸ்வாலின் ரன் அவுட்டில் கூறுவதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. அவர்கள் இருவருக்கும் இடையே பார்னர்ஷிப் அருமையாக இருந்தது. அவர்களது பார்னர்ஷிப்பை உடைத்தது ஆட்டத்தின் மிகப் பெரிய தருணம் என்றார்.

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 310 பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments