முகப்பு
கிரிக்கெட்

1 ரன் வித்தியாசத்தில் வெற்றி! இந்தியாவுக்கு எதிரான தொடரை வென்ற அயர்லாந்து!

அயர்லாந்து அணி இந்தியாவுக்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது.

Updated On : 28 ஜூன் 2026, 11:00 pm IST
வெற்றியைக் கொண்டாடும் அயர்லாந்து வீரர்கள் - X
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் ஜெயித்த அயர்லாந்து அணி தொடரை வென்று சாதனை படைத்தது.

இந்தியா - அயர்லாந்து இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டி20 போட்டி பெல்ஃபாஸ்ட்டில் இன்று (ஜூன் 28) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் விளையாடிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்தது.

Advertisement

Advertisement

அந்த அணியில் அதிகபட்சமாக ஹாரி டெக்டார் 47 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, பெஞ்சமின் காலிட்ஸ் 37 ரன்களும், ஜார்ஜ் டாக்ரெல் 19 ரன்களும் எடுத்தனர். கேப்டன் லோர்கான் டக்கர் 15 ரன்கள் எடுத்தார்.

இந்தியா தரப்பில் அறிமுக வீரரான பிரின்ஸ் யாதவ் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி 4 ஓவர்களில் 22 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அர்ஷ்தீப் சிங் மற்றும் ஷிவம் துபே தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ராணா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

155 ரன்கள் இலக்குடன் விளையாடிய இந்திய அணிக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா தங்களின் முதல் பந்திலேயே அவுட்டாகினர். அடுத்ததாக வந்த இஷான் கிஷன் 12 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 10 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.

இந்திய அணிக்கு அதிகபட்சமாக திலக் வர்மா 46 பந்துகளில் 55 ரன்கள் அடித்து அவுட்டானார். அவருக்கு அடுத்து வந்த அனைவரின் விக்கெட்டுகளும் குறிப்பிட்ட இடைவெளியில் மளமளவென சரிய ஒரு ரன் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

அயர்லாந்து அணியில் ஜெய் மூந்த்ரா, மாத்யூ ஹாலார்டு அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகள் எடுத்த நிலையில், மாத்யூ ஹாம்ரேஸ், ஹாரி டெக்டார் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

summary

Victory by a margin of 1 run! Ireland clinches the series against India!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments