ஜோ ரூட், லியம் டாஸன் அரைசதம்; இந்தியாவுக்கு 259 ரன்கள் இலக்கு!
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 258 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 258 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டி எட்ஜ்பாஸ்டனில் இன்று (ஜூலை 14) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
ஜோ ரூட், லியம் டாஸன் அரைசதம்; இந்தியாவுக்கு 259 ரன்கள் இலக்கு!
Advertisement
Advertisement
டாஸ் வென்று முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 47.5 ஓவர்கள் முடிவில் 258 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 76 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, லியம் டாஸன் 68 ரன்களும், பென் டக்கெட் 43 ரன்களும் எடுத்தனர். வில் ஜாக்ஸ் 20 ரன்கள் எடுத்தார்.
மிடில் ஆர்டர் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஏமாற்றமளித்தது. கேப்டன் ஹாரி ப்ரூக் ஒரு ரன், ஜோஸ் பட்லர் 5 ரன்கள் மற்றும் சாம் கரண் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.
இந்தியா தரப்பில் அக்ஷர் படேல் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பிரசித் கிருஷ்ணா மற்றும் குர்னூர் பிரார் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஷிவம் துபே தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
259 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.
England were bowled out for 258 runs in the first ODI against India.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.