கோலிக்கு அறிவுரை கூற ரிக்கி பாண்டிங்கிற்கு தகுதியில்லை படங்கள்: எக்ஸ் / 7எஸ் கிரிக்கெட், ராஜிவ்.
கிரிக்கெட்

கோலிக்கு அறிவுரை கூற ரிக்கி பாண்டிங்கிற்கு தகுதியில்லை..! இந்திய ரசிகர்கள் ஆவேஷம்!

விராட் கோலிக்கு அறிவுரை கூற ரிக்கி பாண்டிங்கிற்கு தகுதியில்லை என இந்திய ரசிகர்கள் கருத்து.

DIN

சாம் கான்ஸ்டாஸுடனான விராட் கோலி மோதலில் கோலிக்கு அறிவுரை கூற ரிக்கி பாண்டிங்க்கு தகுதியில்லை என இந்திய ரசிகர்கள் பழைய விடியோக்களைப் பகிர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

நேற்று ஆஸி. இளம் அறிமுக வீரர் சாம் கான்ஸ்டாஸை விராட் கோலி தேவையின்றி மோதியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் கோலிக்கு 20 % அபராதம் விதிக்கப்பட்டது.

என்னைப் பொருத்தவரையில் விராட் கோலிக்கு விதிக்கப்பட்ட தண்டனை மிகவும் கடுமையானது இல்லை எனவும் கோலி அவ்வாறு செய்திருக்கக் கூடாதெனவும் ரிக்கி பாண்டிங் கூறியிருந்தார்.

இந்த விவகாரத்தில் ஆஸி. ஊடகங்களும் விராட் கோலியை கடுமையாக விமர்சித்தன.

கோலிக்கு அறிவுரை கூற ரிக்கி பாண்டிங்கிற்கு தகுதியில்லை

இந்த நிலையில் இந்திய ரசிகர்கள் ரிக்கி பாண்டிங்க்கின் பழைய விடியோக்களைப் பகிர்ந்து கருத்து கோலிக்கு அறிவுரை கூற பாண்டிங்குக்கு தகுதியில்லை என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

1998இல் கோகோ கோலா கோப்பையின்போது 19 வயதாக இருந்த ஹர்பஜன் சிங் ரிக்கி பாண்டிங்கின் விக்கெட்டினை எடுத்து ஆக்ரோஷமாக கொண்டாடுவார். அதற்கு ரிக்கி பாண்டிங் ஏதோ சொல்ல அருகில் வந்து இடிப்பதுபோல் வருவார்.

இந்த விடியோவை பகிர்ந்து கோலிக்கு அறிவுரை கூற பாண்டிங்குக்கு தகுதியில்லை என சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்கள் ஆவேஷமாக கருத்து தெரிவிக்கிறார்கள்.

கிரிக்கெட்டில் ஆஸி. அணி ஸ்லெஜ்ட்ஜிங் (வம்பிழுப்பது)க்கு பெயர்போன அணி. ஆனால், யாரையும் உடல் ரீதியாக அடிக்காத நிலையில் கோலி ரசிகர்கள் இப்படியான பதிவுகள் இடுவது இந்தியாவுக்குதான் அசிங்கமெனவும் சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: நான்கு நாட்களில் மூன்றாவது சம்பவம்!

தவெக மாநாடு! இரும்புக் கம்பிகளுக்கு கிரீஸ் தடவுவதை ஆச்சரியத்துடன் பார்க்கும் தொண்டர்கள்

பேளூரில் சுவாமி ஊர்வலத்தில் மோதல்: பொதுமக்கள் சாலை மறியல்!

அமெரிக்காவில் எரிபொருள் நிரப்ப ரூ.2.20 கோடி ரொக்கமாக கொடுத்தாரா புதின்? அவசியம் ஏன்?

இபிஎஸ்ஸுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்குத் தடையில்லை! - உயர்நீதிமன்றம்

SCROLL FOR NEXT