ஸ்டீவ் ஸ்மித் படம்: ஏபி
கிரிக்கெட்

ஒரேயொரு சதத்தினால் ஸ்டீவ் ஸ்மித் படைத்த 3 சாதனைகள்!

ஆஸி. வீரர் ஸ்மித் இந்தியாவுக்கு எதிராக 4ஆவது டெஸ்ட்டில் சதமடித்து பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

DIN

ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் இந்தியாவுக்கு எதிராக எதிராக 4ஆவது டெஸ்ட்டில் சதமடித்து பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நேற்று (டிசம்பர் 26) மெல்போர்னில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் 474 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஸ்மித் 140 ரன்கள் எடுத்து அசத்தினார். எதிர்பாராத விதமாக பந்து ஸ்டம்பில் பட்டு ஆட்டமிழந்தார்.

இந்த சதத்தின் மூலம் ஸ்டீவ் ஸ்மித் இந்தியாவுக்கு எதிராக அதிக சதங்கள் (11) அடித்த ஜோ ரூட்டினை (10) முந்தி முதலிடம் பிடித்துள்ளார்.

டெஸ்ட்டில் இந்தியாவுக்கு எதிராக அதிக சதங்கள்

ஸ்டீவ் ஸ்மித் - 11

ஜோ ரூட் - 10

கேரி சோப்ஸ் - 8

விவி ரிச்சர்ட்ஸ் - 8

ரிக்கி பாண்டிங் - 8

ஸ்மித் டெஸ்ட்டில் தனது 34ஆவது சதத்தினை நிறைவு செய்துள்ளார். இதன்மூலம் கவாஸ்கர், லாரா, யூனிஸ்கான் உடன் சமன்செய்துள்ளார். உலக அளவில் டெஸ்ட்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் 7ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

டெஸ்ட்டில் உலக அளவில் அதிக சதங்கள்

1. சச்சின் டெண்டுல்கர் - 51

2. ஜாக் காலிஸ் - 45

3. ரிக்கி பாண்டிங் - 41

4.குமார சங்ககாரா - 38

5. ஜோ ரூட் - 36

6. ராகுல் திராவிட் - 36

7. ஸ்டீவ் ஸ்மித் - 34

மேலும், பார்டர் கவாஸ்கர் தொடரில் அதிக சதமடித்த வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பார்டர் கவாஸ்கர் தொடரில் அதிக சதங்கள்

1. ஸ்டீவ் ஸ்மித் -10

2. விராட் கோலி -9

3. சச்சின் டெண்டுல்கர் - 9

4. ரிக்கி பாண்டிங் -8

5. மைக்கல் கிளார்க் -7

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸி. டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமனம்!

ஆசிய கோப்பைக்காக புதிய சிகையலங்காரம்..! வைரலாகும் ஹார்திக் புகைப்படங்கள்!

தொடர் மழை, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட ஹிமாசல்: 360 பேர் பலி, 1001 சாலைகள் மூடல்!

ஞாயிறு இரவு நிகழும் சந்திரகிரகணம்: சிவப்பு நிலா பற்றிய முழு விவரம்

2026 உலகக் கோப்பை: முதல் ஆப்பிரிக்க நாடாக மொராக்கோ தேர்வு!

SCROLL FOR NEXT