முகப்பு
கிரிக்கெட்

ஃபார்மில் இல்லாத வீரர்களை நீக்குங்கள்! - முன்னாள் இந்திய கேப்டன்

ஃபார்மில் இல்லாத வீரர்களை அணியில் இருந்து நீக்க வேண்டும்...

Updated On : 27 டிசம்பர், 2024 at 2:53 PM
ரோஹித், கவாஸ்கர்
பகிர்:

ஃபார்மில் இல்லாத வீரர்களை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா -ஆஸ்திரேலியா மோதும் பார்டர் - கவாஸ்கர் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 4 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். விராட் கோலி 36 ரன்னிலும், கே.எல். ராகுல் 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால், இந்திய ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் இந்திய வீரர்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில், “வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், சுமாராக விளையாடி வந்தாலும் இந்திய அணியில் தொடர்ந்து இடம் அளிக்கப்பட்டு வருகிறது. 2021 ஆம் ஆண்டு பார்டர் - கவாஸ்கர் தொடரில் சிறப்பாக விளையாடினாலும், தற்போதைய தொடரில் 7 இன்னிங்ஸ்களில் வெறும் 13 விக்கெட்டுகள் மட்டும் வீழ்த்தியிருக்கிறார்.

அவரால் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு அவரால் ஒத்துழைப்பு கொடுக்கமுடியவில்லை. சிராஜ்க்கு கொஞ்சம் ஓய்வு தேவை என்று நினைக்கிறேன். ஓய்வு என்பது இடைவேளை அல்ல. அணியில் இருந்து நீக்குவது.

நீங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினால் அணியில் இருந்து நீக்கப்படுவீர்கள் என்ற சிந்தனையும் இருக்க வேண்டும். ஒரு கிரிக்கெட் வீரரைப் பார்த்து ஓய்வு குறித்து பேசும் போது அவர்களுக்கு தவறான சிந்தனைகள்கூட தோன்றலாம்.

பாக்ஸிங் டே டெஸ்ட்டில் 4.07 ரன்ரேட்டுடன் 23 ஓவர்களில் 122 ரன்களை விட்டுள்ளார். நன்றாக விளையாடிய ஹர்ஷித் ராணாவை மீண்டும் சிட்னி டெஸ்ட்டில் விளையாடவைக்க வேண்டும் அல்லது பிரசித் கிருஷ்ணாவை பிளேயிங் லெவனின் விளையாடவைக்க வேண்டும். சிராஜிடன் கூற வேண்டும், நாங்கள் எதிர்பார்த்தது போன்று வேகமான ஆடுகளங்களில் சிறப்பாக பந்துவீசவில்லை” என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →