முகப்பு
கிரிக்கெட்

ஸ்டீவ் ஸ்மித்தை அவமதித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா..! தேர்வுக் குழுவை விமர்சித்த முன்னாள் வீரர்!

டி20 உலகக் கோப்பையில் ஆஸி. அணியின் தோல்வி குறித்து முன்னாள் வீரர் பேசியிருப்பதாவது...

Updated On : 17 பிப்ரவரி 2026, 4:17 pm IST
ஸ்டீவ் ஸ்மித், மார்க் வாக். - கோப்புப் படங்கள்.
பகிர்:

முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மார்க் வாக் டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவின் தோல்வி குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா சரியான அணியைத் தேர்வு செய்யவில்லை என்றும் இது ஸ்டீவ் ஸ்மித்துக்கு அவமானம் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பையின் முக்கியமான போட்டியில் ஆஸ்திரேலிய அணி இலங்கையிடம் தோற்றது. முன்னதாக, ஜிம்பாப்வே இடமும் தோற்றதால், சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாத சூழ்நிலையில் இருக்கிறது.

Advertisement

Advertisement

மோசமான அணித் தேர்வு...

இந்நிலையில், முன்னாள் வீரர் மார்க் வாக் எஸ்இஎன்க்யூ பிரேக்ஃபாஸ்ட் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் பேசியிருப்பதாவது:

இந்தத் தொடர் முழுவதும் தவறான அணித் தேர்வினாலும் காயத்தினாலும் சீர்குழைந்தது. சரியான் முன் தயாரிப்புகள் இல்லை என்று நினைக்கிறேன். நாங்கள் சுமாரான ஒரு பிரிவில் இருந்தும் நான் நினைத்தது போலவே நடந்துவிட்டது.

நாம் எல்லோரிடமும் கனிவாக இருக்க முடியாது. சில நேரங்களில் முக்கியமான முடிவுகளை எடுத்தாகவே வேண்டும். என்னைப் பொறுத்தவரை, ஸ்டீவ் ஸ்மித்தை அணியில் எடுக்காததே மிகப்பெரிய தவறு என்பேன். இதைப் பல ஆண்டுகளுக்கு நினைவில் கொள்வேன்.

இந்த ஆஸ்திரேலிய அணியை விட ஸ்மித் பிபிஎல் தொடரில் எவ்வளவு கிளாஸாக விளையாடினார் என்பதை அனைவருமே பார்த்தனர்.

இது ஸ்டீவ் ஸ்மித்திற்கு அவமானம்...

ஸ்மித் மிகப்பெரிய ஃபீல்டர். சுழல் பந்துவீச்சுக்கு எதிராக அபாரமாக விளையாடுவார். முதலில் அவர்தான் தேர்வாகியிருக்க வேண்டும். ஆனால், அவரை எடுக்கவில்லை. கடைசியில் அவரை எடுத்தும் பிளேயிங் லெவனில் எடுக்கவில்லை.

அணித் தேர்வின் குழப்பமும் காயமும் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக அமையவில்லை. அணித் தேர்வில் முழுமையாக தவறிழைத்துவிட்டார்கள்.

ஸ்டீவ் ஸ்மித்துக்கு 100 அடிக்குப் பிறகு நல்ல வீரர்களை எடுப்பதில் என்ன பலன்? உண்மையில் இது ஸ்டீவ் ஸ்மித்திற்கு அவமானம்.

ஃபார்மில் இருக்கும் வீரர்களை அணியில் எடுக்க வேண்டும்

மாட் ரென்ஷா சிறப்பாக விளையாடினார். அதிலும் இடதுகை பேட்டர். அவரை ஏன் கடைசி போட்டியில் எடுக்கவில்லை? டி20யில் ஃபார்மில் இருப்பது கடினம். ஃபார்மில் இருக்கும் வீரர்களை அணியில் எடுக்க வேண்டும்.

ஃபார்மில் இல்லாதவர்களுக்கு நம்பிக்கை டி20யில் இடமில்லை. மேக்ஸ்வெல், கன்னோலி, கிரீன், இங்லீஷ் ஃபார்மில் இல்லாத வீரர்கள்.

தேர்வுக்குழுவினர் ஃபார்மில் இருக்கும் வீரர்களை அணியில் எடுக்க வேண்டும் என்றார்.

ஜிம்பாப்வே அணி மீதமிருக்கும் போட்டிகளில் தோற்று, ஓமனுடன் ஆஸி. அபார வெற்றி பெற்றால் மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்குச் செல்ல முடியும். கிட்டதட்ட ஆஸி. அணி வெளியேறியதாகவே கருதப்படுகிறது.

summary

T20 World Cup 2026: Mark Waugh slams Australian selectors for ‘insulting’ Steve Smith.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.