டெஸ்ட் கிரிக்கெட்டில் 11,000 ரன்களுடன் சாதனைப் பட்டியலில் இணைந்த ஸ்டீவ் ஸ்மித்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட்டில் 11,000 ரன்களை கடந்தது பற்றி...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட்டில் 11,000 ரன்களை கடந்தது சாதனை படைத்துள்ளார். உலக அளவில் 12ஆவது வீரராக இந்தப் பட்டியலில் இணைந்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் ஸ்டீவ் ஸ்மித் இந்த சாதனையை நிகழ்த்தினார். ஆஸ்திரேலிய வீரர்களில் மூன்றாவது வீரராக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் டாஸ் வென்ற ஆஸி. பந்துவீசியது. தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 425/9 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
Advertisement
Advertisement
ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 99 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 28 ரன்கள் எடுத்தார்.
தற்போது, ஆஸ்திரேலிய அணி ஃபாலோ ஆன் ஆனதால் தனது இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் விளையாடி வருகிறது. 10. 2ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 25 ரன்கள் எடுத்துள்ளது.
டெஸ்ட்டில் அதிக ரன்கள் அடித்த ஆஸி. வீரர்கள்
1. ரிக்கி பாண்டிங் - 13,378 ரன்கள்
2. ஆலன் பார்டர் - 11,174 ரன்கள்
3. ஸ்டீவ் ஸ்மித் - 11,000 ரன்கள்
Australian player Steve Smith crosses 11,000 runs in Test cricket!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.