டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பிங்கில் வரலாறு படைத்த லிட்டன் தாஸ்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸ்களில் அதிக வீரர்களை ஆட்டமிழக்கச் செய்து வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் லிட்டன் தாஸ் வரலாறு படைத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸ்களில் அதிக வீரர்களை ஆட்டமிழக்கச் செய்து வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் லிட்டன் தாஸ் வரலாறு படைத்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா - வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜோஹன்ஸ்பெர்க்கில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் வங்கதேசத்தை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 557 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர் பேட்டரான லிட்டன் தாஸ் 6 கேட்ச்சுகள் மற்றும் இரண்டு ஸ்டம்பிங்குகள் செய்தார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் 8 பேரை ஆட்டமிழக்கச் செய்த விக்கெட் கீப்பர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார் லிட்டன் தாஸ்.
Advertisement
Advertisement
இதற்கு முன்பாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் விக்கெட் கீப்பர் ஒருவர் 7 பேரை ஆட்டமிழக்கச் செய்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது, அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் வாசிம் பாரி, இங்கிலாந்தின் பாப் டெய்லர், நியூசிலாந்தின் இயான் ஸ்மித், மேற்கிந்தியத் தீவுகளின் ரைட்லி ஜேக்கப்ஸ் மற்றும் ஜோஷ்வா டி சில்வா ஆகிய விக்கெட் கீப்பர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் 7 பேரை ஆட்டமிழக்கச் செய்திருக்கிறார்கள். 8 பேரை ஆட்டமிழக்கச் செய்து அவர்களது சாதனையை லிட்டன் தாஸ் முறியடித்துள்ளார்.