ஆசிய விளையாட்டு தோல்விக்காக கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதில் அர்த்தமில்லை: லிட்டன் தாஸ்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தோல்வியடைந்ததற்காக கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதில் அர்த்தமில்லை என வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் தெரிவித்துள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தோல்வியடைந்ததற்காக கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதில் அர்த்தமில்லை என வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் தெரிவித்துள்ளார்.
20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வருகின்றன. அதில், கிரிக்கெட்டில் இந்திய அணி தங்கப் பதக்கமும், பாகிஸ்தான் வெள்ளிப் பதக்கமும் வென்றன. வெண்கலப் பதக்கத்துக்கானப் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி இலங்கை அணி பதக்கத்தை வசப்படுத்தியது.
இந்த நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் தோல்வியடைந்ததற்காக கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதில் அர்த்தமில்லை என வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக அவர் பேசியதாவது: முதல் 8 ஓவர்களை நாங்கள் மிகவும் நன்றாக வீசியதாக நினைக்கிறேன். அதன் பின், இலங்கை வீரர் தரிந்து ரத்னாயகே மிகவும் அபாரமாக விளையாடினார். கடினமான ஆடுகளத்தில் மிகவும் அற்புதமாக விளையாடி ரன்கள் குவித்தார். எங்களது பந்துவீச்சாளர்களால் அவரது ஆட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
பேட்டிங்கிலும் நாங்கள் சரியாக செயல்படவில்லை. என்னுடைய பேட்டிங் சிறப்பாக இல்லை. என்னால் இரண்டு போட்டிகளிலும் ரன்கள் குவிக்க முடியவில்லை. அதற்காக, நான் கேப்டன் பொறுப்பிலிருந்து விலக நினைக்கவில்லை. கிரிக்கெட்டில் ஏற்ற, இறக்கங்கள் இருக்கும். ஒரு நாள் சிறப்பாக அமையும், அடுத்த நாள் மோசமான நாளாக அமையும். அதனால், கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதில் எந்தவொரு அர்த்தமும் இல்லை. பெரிய இலக்கை நோக்கி திட்டமிட்டு அதை அடையமுடியாதபோது கடினமாக உணர்வது இயல்பே. ஆனால், ஒரு அணியாக கடந்த காலங்களில் நிறைய விஷயங்களை சாதித்துள்ளோம், எதிர்காலத்திலும் சாதிப்போம் என்றார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட்டில் வங்கதேசம் பதக்கம் வெல்லாதது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Bangladesh team captain Litton Das has stated that there is no point in stepping down from the captaincy due to the defeat at the Asian Games.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.