படம் | AP
கிரிக்கெட்

பாக்ஸிங் டே டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும்; வேகப் பந்துவீச்சாளர் நம்பிக்கை!

பாக்ஸிங் டே டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் என நம்பிக்கை இருப்பதாக அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் தெரிவித்துள்ளார்.

DIN

பாக்ஸிங் டே டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் என நம்பிக்கை இருப்பதாக அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஸ்காட் போலாண்ட் தெரிவித்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நாளுக்கு நாள் விறுவிறுப்பாக மாறி வருகிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் எடுக்க, இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை 358 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய அணி ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 116 ரன்கள் பின் தங்கியுள்ளது. ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி மிகப் பெரிய ரன்கள் முன்னிலையுடன் அதன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணியை நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தரின் பார்ட்னர்ஷிப் சரிவிலிருந்து மீட்டது. நிதீஷ் குமார் ரெட்டி சதமும், வாஷிங்டன் சுந்தர் அரைசதமும் விளாசினர்.

ஸ்காட் போலாண்ட் நம்பிக்கை

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியால் வெற்றி பெற முடியும் என்பதை இன்னும் நம்புவதாக அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளார் ஸ்காட் போலாண்ட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியாவைக் காட்டிலும் 116 ரன்கள் முன்னிலையில் உள்ளோம். நாங்கள் வலுவான நிலையில் உள்ளோம். இந்தியாவைக் காட்டிலும் இதைவிட இன்னும் அதிக ரன்கள் முன்னிலை பெற்றிருக்கலாம். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் இது போன்ற ஏற்ற, இறக்கங்கள் இருக்கும். நாளை போட்டி தொடங்கியவுடன் இந்திய அணியின் கடைசி விக்கெட்டினை விரைவில் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அதன் பின், நாங்கள் அதிக ரன்கள் முன்னிலை பெற்று ஆட்டத்தை எங்களுக்கு சாதகமாக மாற்றுவோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“அன்னைக்கே உன்ன தட்டிருக்கணும்” மயிலாடுதுறை ஆணவக்கொலை சம்பவம்: பெண்ணின் தாயார் மிரட்டிய விடியோ!

தில்லியில் அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி!

“Feel Good, Comedy Film!” குமாரசம்பவம் படம் பற்றி பிரபலங்கள்!

காஸாவில் பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளை நினைத்துப்பாருங்கள்! -இஸ்ரேலிடம் ஐ.நா. மனித உரிமைகள் தலைவர்

மீனா பிறந்த நாளில் த்ரிஷ்யம் 3 போஸ்டர்!

SCROLL FOR NEXT