படம் | AP
கிரிக்கெட்

சிட்னி டெஸ்ட்டில் மிட்செல் ஸ்டார்க் விளையாடுவாரா? பாட் கம்மின்ஸ் பதில்!

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் விளையாடுவாரா என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேசியுள்ளார்.

DIN

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் விளையாடுவாரா என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளில் ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், பந்துவீசுவதற்கு சிரமப்படுவதை பார்க்க முடிந்தது. இதனால், ஆட்டத்தின் கடைசி நாளில் அவர் பந்துவீசுவாரா என்ற சந்தேகம் எழுந்தது. இருப்பினும், தான் முழு உடல்தகுதியுடன் இருக்கிறேன் எனவும், ஆஸ்திரேலிய அணிக்காக கடைசி நாளில் 20 ஓவர்கள் வீசவும் தயாராக இருக்கிறேன் எனவும் ஸ்டார்க் தெரிவித்தார்.

ஆட்டத்தின் கடைசி நாளில் மிட்செல் ஸ்டார்க் 16 ஓவர்களை வீசினார். இரண்டாவது இன்னிங்ஸில் மிட்செல் ஸ்டார்க், விராட் கோலியின் விக்கெட்டினை வீழ்த்தினார். இருப்பினும், அவர் பந்துவீச்சில் சிரமத்தை சந்தித்ததைப் பார்க்க முடிந்தது.

சிட்னி டெஸ்ட்டில் விளையாடுவாரா?

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் இறுதி நாள்களில் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச சிரமப்பட்ட நிலையில், அவர் சிட்னி டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: மிட்செல் ஸ்டார்க் ஒரு போராளி. அவர் வலியுடன் பந்துவீசினார். இருப்பினும், அவரது பந்துவீச்சு வேகம் குறையவில்லை. அணிக்காக பந்துவீச அவர் ஒருபோதும் தயங்கியதில்லை. அவருக்கு வலி இருக்கிறது. ஆனால், வலி இருப்பதைத் தவிர போட்டியில் விளையாடுவதற்கான முழு உடல்தகுதியுடன் அவர் இருக்கிறார் என்றார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் ஜனவரி 3 ஆம் தேதி தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழாய் பராமரிப்பு பணி: இன்றும் நாளையும் நீா் விநியோகத்தில் தடங்கலுக்கு வாய்ப்பு!

11.2.1976: இரண்டாவது டெஸ்ட் "டிரா” ஆகியது: கவாஸ்கர் - விசுவநாத் அபார ஆட்டம்

ஸ்ரீராம் பொதுக் காப்பீடு லாபம் ரூ.165 கோடி!

ஆசிய ரைஃபிள்/பிஸ்டல் சாம்பியன்ஷிப்: ஆகிருதி, அஞ்சுமுக்கு பதக்கம்!

ரஞ்சி கோப்பை: இன்னிங்ஸ் வெற்றியுடன் அரையிறுதியில் பெங்கால்!

SCROLL FOR NEXT