விக்ரம் ரத்தோர் (கோப்புப் படம்) 
கிரிக்கெட்

இந்திய அணியை கட்டமைப்பதில் கவனமாக இருக்க வேண்டும்: விக்ரம் ரத்தோர்

இந்திய அணியில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

DIN

இந்திய அணியில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் அணியில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்று அசத்தியது. உலகக் கோப்பையை வென்ற பிறகு, மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா மூவரும் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.

இந்த நிலையில், இந்திய அணியில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் அணியில் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் இடத்தை நிரப்புவது எளிதான விஷயமாக இருக்கப் போவதில்லை. ஆனால், அவர்கள் இருவரும் இன்னும் சில காலத்துக்கு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்கள். இந்திய அணியை குறித்து நான் அதிகம் கவலைப்படவில்லை. ஏனெனில், இந்திய அணியில் திறமை வாய்ந்த இளம் வீரர்கள் அதிகம் இருக்கிறார்கள்.

திறமை வாய்ந்த இளம் வீரர்களை கொண்டு வலுவான இந்திய அணியை கட்டமைப்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். அந்த செயல் மிகவும் பொறுமையாகவும் ஆழமானதாகவும் இருக்க வேண்டும். ஷுப்மன் கில், ரிஷப் பந்த், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜுரெல் போன்ற வீரர்கள் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் தங்களை இந்திய அணியில் வலுவாக நிலைநிறுத்திக் கொள்வார்கள்.

ஒருநாள் போட்டிகளுக்கு நம்மிடம் அனுபவமிக்க வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் மற்றும் ஹார்திக் பாண்டியா போன்ற வீரர்கள் இருக்கிறார்கள். இளம் வீரர்கள் பலரும் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இந்திய அணியின் முதுகெலும்பாக மாறி விடுவார்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT