நேபாளத்துக்கு 179 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!
நேபாளத்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் குவித்துள்ளது.
நேபாளத்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் குவித்துள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (ஜூலை 23) நடைபெற்று வரும் இரண்டாவது போட்டியில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது.
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷஃபாலி வர்மா மற்றும் தயாளன் ஹேமலதா களமிறங்கினர். இந்த இணை அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தது. இந்திய அணி 122 ரன்களுக்கு தனது முதல் விக்கெட்டினை இழந்தது. தயாளன் ஹேமலதா 42 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
Advertisement
அதிரடியாக விளையாடிய ஷஃபாலி வர்மா அரைசதம் எடுத்து அசத்தினார். அவர் 48 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அதன்பின் களமிறங்கிய சஜனா 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதிக் கட்டத்தில் அதிரடி காட்டிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 15 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் 5 பவுண்டரிகள் அடங்கும்.
இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்துள்ளது. நேபாளம் தரப்பில் சீதா ராணா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கபிதா ஜோஷி ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நேபாளம் களமிறங்குகிறது.