அறிமுக ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றி ஸ்காட்லாந்து வீரர் சாதனை!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகப் போட்டியில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஸ்காட்லாந்து வீரர் சார்லி கேசல் சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகப் போட்டியில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஸ்காட்லாந்து வீரர் சார்லி கேசல் சாதனை படைத்துள்ளார்.
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை லீக் தகுதி ஆட்டத்தில் ஸ்காட்லாந்து மற்றும் ஓமன் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஓமன் அணி 91 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஸ்காட்லாந்து தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய அறிமுக வீரர் சார்லி கேசல் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைத்தார்.
Advertisement
Advertisement
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுக வீரர் ஒருவர் கைப்பற்றிய அதிகபட்ச விக்கெட்டுகள் இதுவாகும். இதற்கு முன்னதாக, தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா, வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதே அறிமுக வீரர் கைப்பற்றிய அதிகபட்ச விக்கெட்டுகளாக இருந்தது.
இந்த நிலையில், ககிசோ ரபாடாவின் அந்த சாதனையை ஸ்காட்லாந்து வீரர் சார்லி கேசல் முறியடித்துள்ளார். 5.4 ஓவர்கள் வீசிய சார்லி கேசல் 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ஓமனுக்கு எதிரான இந்தப் போட்டியில் ஸ்காட்லாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.