படம் | X 
கிரிக்கெட்

சிக்ஸ் அடித்தால் அவுட்..! புதிய விதிகளை அமல்படுத்திய இங்கிலாந்து கிரிக்கெட் கிளப்

இங்கிலாந்து கிரிக்கெட் கிளப் சிக்ஸ் அடித்தால் அவுட் என்ற புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது.

DIN

இங்கிலாந்தில் உள்ள உலகின் மிக பழைமையான கிரிக்கெட் கிளப்பான சவுத்விக், ஷோர்ஹாம் கிரிக்கெட் கிளப்பில் விளையாடும் வீரர்கள், சிக்ஸர் விளாச தடைவித்துள்ளது.

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, ஏராளமான பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் அடிக்கப்படாவிட்டால், ரசிகர்கள் விளையாட்டை ரசிக்கமாட்டார்கள். இதனால், டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளாசப்படும் சிக்ஸர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு பேட்ஸ்மேனும் முடிந்தவரை சிக்ஸர்களை அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சி செய்வர். இருப்பினும், இங்கிலாந்தில் உள்ள 234 ஆண்டுகள் பழமையான கிரிக்கெட் கிளப்பான சவுத்விக், ஷோர்ஹாம் கிரிக்கெட் கிளப் ஆச்சரியமான ஒரு முடிவை எடுத்துள்ளது.

ஒரு ஆட்டத்தின் போது ஒரு பேட்ஸ்மேன் சிக்ஸர் அடித்தால், அவர் அவுட் என்று அறிவிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளது.

படம் | X

இங்கிலாந்தில் உள்ள சௌத்விக் மற்றும் ஷோர்ஹாம் கிரிக்கெட் கிளப் உள்ளூர்வாசிகள் அளித்துள்ள புகாரில் பார்வையாளர்களிடையே காயங்கள் அதிகரிப்பதைத் தொடர்ந்து பேட்ஸ்மேன்கள் சிக்ஸர் அடிக்க தடை விதித்துள்ளது.

சிக்ஸ் அடிப்பதனால் மைதானத்திற்கு அருகே உள்ள வீடுகளின் கண்ணாடிகள், கார்கள் அடிக்கடி சேதமடைவதாக குடியிருப்புவாசிகள் புகார் அளித்துள்ளனர்.

இந்த விதி எவ்வாறு செயல்படுகிறது?

ஒரு போட்டியின் போது, ​​பேட்ஸ்மேன் முதல் முறையாக ஒரு சிக்ஸரை அடித்தால், நடுவர் பேட்ஸ்மேனுக்கு எச்சரிக்கை விடுப்பார். ஆனால், அந்த சிக்சருக்கு ரன் எதுவும் வழங்கப்படாது. பேட்ஸ்மேன் மேலும் ஒரு சிக்சர் அடித்தால், அவர்கள் அவுட்டாக அறிவிக்கப்படுவார்கள். இருப்பினும், கிரிக்கெட் கிளப்பின் இந்த முடிவு பேட்ஸ்மேன்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

கூட்டுறவும் நாட்டுயா்வும்!

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT