இங்கிலாந்து வீரர் ஆலி போப்  Rui Vieira
கிரிக்கெட்

ஒரே நாளில் 500-600 ரன்கள் அடிப்போம்..! இங்கிலாந்து வீரர் நம்பிக்கை!

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே நாளில் 500-600 ரன்களை நிச்சயமாக அடிப்போமென இங்கிலாந்து வீரர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

DIN

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹமில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை இங்கிலாந்து அணி 241 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

கடந்த 2000ஆவது ஆண்டுக்குப் பிறகு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட கடைசி 8 முறையும் மேற்கிந்தியத் தீவுகள் தொடர்ச்சியாக டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. அந்த அணி இங்கிலாந்து மண்ணில் கடைசியாக கடந்த 1988 ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணி தனது அதிரடியான பேட்டிங் ஸ்டைலுக்கு பேஸ்பால் எனப் பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில் மெக்குல்லம் இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாளர் ஆனதிலிருந்து அதிரடியாக விளையாடி வருகிறார்கள்.

இது குறித்து இங்கிலாந்து வீரர் ஆலி போப் கூறியதாவது:

உண்மையில் அதிமான ரன்கள் அடிக்க ஆவலாக இருக்கிறது. பசி என்றே சொல்லாம். தற்போது அதிகமான பசி இருக்கிறது. ஏனெனில் பேட்டிங் வரிசை அப்படி இருக்கிறது.

கருணை இல்லாத வகையில் பேட்டிங் செய்வதே எங்களது இலக்கு. அதுதான் எங்களது இயல்பான ஆட்டமாகவும் இருக்கிறது. அதிரடியாக கருணையில்லாத வகையில் விளையாடுவது டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரு பகுதியாகவும் இருக்கிறது.

சில நாள்களில் சூழ்நிலை சரியில்லை என்றால் 280-300 ரன்கள் அடிப்போம். ஆனால் நிச்சயமான சில நாள்களில் 500-600 ரன்களை ஒரே நாளில் அடிப்போம் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன் என்றார்.

மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி ஒரே நாளில் 416 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்!

ஜம்மு நெடுஞ்சாலையில் சிக்கித்தவிக்கும் 1000-க்கும் மேற்பட்ட பழ லாரிகள்!

கே.கே.நகர், தி.நகர் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சர்வதேச டி20-ல் இருந்து மிட்செல் ஸ்டார்க் ‘திடீர்’ ஓய்வு!

6வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை!

SCROLL FOR NEXT