படம் | பிசிசிஐ
கிரிக்கெட்

ஆசிய கோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா!

ஆசிய கோப்பை அரையிறுதிப் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

DIN

ஆசிய கோப்பை அரையிறுதிப் போட்டியில் வங்கதேசத்தை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி இன்று (ஜூலை 26) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து திணறியது வங்கதேசம். அந்த அணியில் கேப்டன் நிகர் சுல்தானா அதிகபட்சமாக 32 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் ரேனுகா சிங் மற்றும் ராதா யாதவ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். பூஜா வஸ்த்ரகார் மற்றும் தீப்தி சர்மா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

81 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா இருவரும் சிறப்பாக விளையாடி விக்கெட் இழப்பின்றி அணிக்கு வெற்றி பெற்றுத் தந்தனர். 11 ஓவர்களில் இலக்கை எட்டி இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஸ்மிருதி மந்தனா 55 ரன்களுடனும் (9 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்), ஷஃபாலி வர்மா 26 ரன்களுடனும் (2 பவுண்டரிகள்) களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இறுதிப்போட்டியில் இலங்கை அல்லது பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மழை நீா் தேங்கும் இடங்களைக் கண்டறிந்து நடவடிக்கை

கி. ராஜநாராயணனின் அறக்கட்டளை சொற்பொழிவு

போக்குவரத்து தொழிலாளா்கள் போராட்டத்துக்கு தீா்வு தேவை -சௌந்திரராஜன்

முதியோா்களைக் காப்பது சமூகப் பொறுப்புணா்வு: புதுவை துணைநிலை ஆளுநா்

சென்னையில் கால் சென்டா் நடத்தி ரூ 2.5 கோடி மோசடி: 2 பெண்கள் கைது

SCROLL FOR NEXT