ஹார்திக் பாண்டியா 
கிரிக்கெட்

ஹார்திக் பாண்டியா பென் ஸ்டோக்ஸை போன்றவர், ஆனால்... முன்னாள் நியூசி. வீரர் கூறுவதென்ன?

ஹார்திக் பாண்டியா பென் ஸ்டோக்ஸை போன்று திறமையானவர் என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

DIN

ஹார்திக் பாண்டியா பென் ஸ்டோக்ஸை போன்று திறமையானவர் என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஹார்திக் பாண்டியா இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூர்யகுமார் யாதவ் டி20 தொடருக்கான கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், ஹார்திக் பாண்டியா பென் ஸ்டோக்ஸை போன்று திறமையானவர் எனவும், ஆனால் தொடர்ச்சியாக அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் எனவும் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்காட் ஸ்டைரிஸ் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹார்திக் பாண்டியா நிறைய திறமைகளைக் கொண்டுள்ளார். இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸைப் போன்றவர் ஹார்திக் பாண்டியா. அவர் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர். ஆனால், அவர் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட தவறுவதாக நினைக்கிறேன். உடல் தகுதிக்கு அவர் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பந்துவீச்சாளராக இருப்பது மிகவும் கடினம். ஒரு பந்துவீச்சாளராக ஹார்திக் பாண்டியா சிறப்பாக செயல்படுகிறார். தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படும் ஆல்ரவுண்டராக ஹார்திக் பாண்டியாவை பார்க்க விரும்புகிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

சிபு சோரன் மறைவு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

வங்க மொழியை வங்கதேச மொழி எனக் குறிப்பிடுவதா? முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்

SCROLL FOR NEXT