ரித்திமான் சாஹா. 
கிரிக்கெட்

ஓய்வை அறிவித்தார் ரித்திமான் சாஹா!

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறவுள்ளதாக இந்திய வீரர் ரித்திமான் சாஹா அறிவித்துள்ளார்.

DIN

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறவுள்ளதாக இந்திய வீரர் ரித்திமான் சாஹா அறிவித்துள்ளார்.

40 வயதாகும் சாஹா இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். கடைசியாக நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கடந்த 2021ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்தார். அதன் பிறகு அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறுமா?

இதனால் ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் அவர் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறவுள்ளதாக இந்திய வீரர் ரித்திமான் சாஹா ஞாயிற்றுகிழமை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், நேசத்திற்குரிய கிரிக்கெட் பயணத்தில் இந்த ரஞ்சி தொடரே எனது கடைசி தொடராக இருக்கும். நான் ஓய்வு பெறுவதற்கு முன் ஒரு முறை கடைசியாக பெங்கால் அணிக்காக விளையாட இருக்கிறேன்.

இந்த சீசனை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்வேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே எதிர்வரும் ஐபிஎஸ் மெகா ஏலத்தில் பங்கேற்க சாஹா பதிவு செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

SCROLL FOR NEXT