கிரிக்கெட்

பந்துவீச்சில் சந்தேகம்: ஷகிப் அல் ஹசன் பந்துவீச தடை விதிக்கப்படுமா?

வங்கதேச பந்துவீச்சாளர் ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சு குறித்து புகார் எழுந்துள்ளது.

DIN

இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்டி கிரிக்கெட் போட்டியில் சர்ரே அணிக்காக விளையாடிவரும் வங்கதேச ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் சந்தேகத்திற்குரிய வகையில் பந்துவீசியதாக போட்டி கள நடுவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஷகிப் அல் ஹசன் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்திடன் தனது பந்துவீச்சை பகுப்பாய்வு செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

செப்டம்பர் மாதத்தில் டௌண்டனில் நடந்த போட்டியில் சோமர்செட் அணிக்கு எதிரான போட்டியில் சர்ரே அணிக்காக விளையாடிய ஷகிப் அல் ஹசன் மொத்தமாக 63 ஓவர்கள் பந்துவீசி 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இருப்பினும், கள நடுவர்களான ஸ்டீவ் ஓ'ஷாக்னெஸ்ஸி மற்றும் டேவிட் மில்ன்ஸ் ஆகியோர் ஷகிப் அல் ஹசனின் பந்துவீச்சு சந்தேகத்திற்குரியதாக இருப்பதாக புகார் அளித்துள்ளனர்.

2010- 2011 ஆம் ஆண்டு வோர்செஸ்டர் அணிக்கு விளையாடிய பின்னர் மீண்டும் 13 ஆண்டுகளுக்குப் பின்னர், சர்ரே அணிக்காக விளையாடினார் ஷகிப் அல் ஹசன்.

ஷகிப் அல் ஹசன் விளையாடுவதற்கு இன்னும் தடைகள் எதுவும் விதிக்கப்படவில்லை. இருப்பினும், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அவரது பந்துவீச்சு குறித்து சோதனை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

17 ஆண்டுகளாக விளையாடிவரும் ஷகிப் அல் ஹசன் இதுவரை இதுபோன்ற பிரச்னைகளை சிக்கியது இல்லை. அவர் இதுவரை 447 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 712 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதுகுறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் கூறுகையில், “இந்தச் சம்பவத்தில் உள்ளூர் கிரிக்கெட்டுக்கும் சர்வதேச கிரிக்கெட்டும் சம்பந்தம் இல்லை. இது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் தொடர்புடையது. இதற்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கும் தொடர்பில்லை” என்று தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஷகிப் அல் ஹசன் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கனில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 7 பேர் பலி, 150 பேர் காயம்!

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! மீனவர்கள் 35 பேர் கைது

புதிய பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தம்பதியை தாக்கியதாக 4 போ் மீது வழக்கு

கூலித் தொழிலாளிக்கு ரூ. 1.60 கோடி வரிஏய்ப்பு செய்ததாக ஜிஎஸ்டி நோட்டீஸ்

SCROLL FOR NEXT