தாமஸ் ஜாக் டிரகா  
கிரிக்கெட்

ஐபிஎல் மெகா ஏலத்தில் இத்தாலிய வீரர்!

முதல் முறையாக ஐபிஎல் மெகா ஏலத்தில் இத்தாலிய வீரர் ஒருவர் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

DIN

முதல்முறையாக ஐபிஎல் மெகா ஏலத்தில் பதிவு செய்யும் முதல் இத்தாலிய வீரர் என்ற பெருமையை வேகப்பந்து வீச்சாளர் தாமஸ் ஜாக் டிரகா பெற்றுள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மெகா ஏலத்தில் 1,574 வீரர்கள் பங்கு பெற உள்ளனர். 16 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். மொத்தமாக வெளிநாட்டு வீரர் 409 பேர் தங்களது பெயர்களைப் பதிவுசெய்துள்ளனர்.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்யும் வேளையில் இத்தாலியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் தாமஸ் ஜாக் டிராகா, ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்த முதல் இத்தாலி வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

மெகா ஏலத்தில் தாமஸ் ஜாக் டிராகா தனது அடிப்படை விலையை ரூ.30 லட்சமாக நிர்ணயம் செய்துள்ளார்.

24 வயதான தாமஸ் ஜாக் டிரகா், 2025 ஆம் ஆண்டுக்கான சர்வதேச டி20 லீக் தொடரில் எம்ஐ எமிரேட்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

குளோபல் டி20 கனடா லீக்கில் பிராம்ப்டன் வுல்வ்ஸ் அணிக்காக விளையாடிய டிராக் 6 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டிராகா ஜூன் 2024 இல் இத்தாலிக்காக அறிமுகமானார். இத்தாலிக்காக நான்கு டி20 போட்டிகளில் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தாமஸ் டிராகா குளோபல் டி20 கனடா லீக்கின் போது சுனில் நரைன், டேவிட் வைஸ் , கைல் மேயர்ஸ் மற்றும் இப்திகார் அகமது போன்றோரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்ணை அவதூறு செய்தவா் கைது

ஜம்மு-காஷ்மீா்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

சென்னை மாநகரப் பகுதிகளில் மின் விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

சிபிஎஸ்இ மண்டல இயக்குநா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

போலீஸாரிடம் தகராறு செய்த கைதிகள் மீது 8 பிரிவுகளில் வழக்கு

SCROLL FOR NEXT