டிம் பெய்ன்  
கிரிக்கெட்

ஆஸி. பிஎம் லெவன் அணியின் பயிற்சியாளராகும் முன்னாள் கேப்டன்!

ஆஸி. பிஎம் லெவன் அணியின் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் டிம் பெய்ன் நியமிக்கப்பட்டுள்ளார்.

DIN

இந்தியாவுக்கு எதிராக இரண்டு நாள்கள் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணியின் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் டிம் பெய்ன் நியமிக்கப்பட்டுள்ளார்.

39 வயதான டிம் பெய்ன் 2020-21 ஆம் ஆண்டுக்கான பார்டர் - கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலிய அணியை தலைமை தாங்கினார். அந்தத் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.

டிம் பெய்ஸ் ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை 35 டெஸ்ட், 35 ஒருநாள், 12 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடைசியாக 2021 ஆம் ஆண்டு பிரிஸ்பேனின் காபா திடலில் நடந்த போட்டியில் விளையாடியிருந்தார். அந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

அவர் கடைசியாக 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தாஸ்மேனியா அணிக்காக முதல் தரப் போட்டியில் விளையாடினார். அதன்பின்னர் தற்போது பிக்-பாஸ் கிரிக்கெட்டில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் பயிற்சியாளராக உள்ளார்.

இதுகுறித்து டிம் பெய்ன் கூறுகையில், “என்னைப் போன்ற இளம் பயிற்சியாளருக்கு நீங்கள் கொடுத்த சிறந்த வாய்ப்பாக கருதுகிறேன். அதையே நானும் எதிர்பார்த்துள்ளேன். ஆஸ்திரேலியாவில் உள்ள மிகச்சிறந்த இளம் கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பார்டர் - கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அதில் இளஞ்சிவப்பு நிறப் பந்தில் நடைபெறும் இரண்டு நாள் ஆட்டம் டிசம்பர் 6-10-ல் அடிலெய்டில் நடைபெறும் ஆட்டத்துக்கு முன்னதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற நவம்பர் மாதம் 22 ஆம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT