ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, டி20 தொடரை வெல்ல பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் குறிவைத்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான (டி20 , ஒருநாள்) புதிய கேப்டனாக முகமது ரிஸ்வான் அண்மையில் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையிலான பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது.
டி20 தொடரை குறிவைக்கும் ரிஸ்வான்
இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. 22 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆஸ்திரேலிய மண்ணில் பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.
ஒருநாள் தொடர் நிறைவடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நாளை மறுநாள் (நவம்பர் 14) தொடங்குகிறது. முதல் போட்டி பிரிஸ்பேனில் நடைபெறுகிறது.
பாகிஸ்தான் அணி இணைந்து ஒன்றாக செயல்பட்டால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக கைப்பற்ற வாய்ப்பிருக்கிறது என பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: பாகிஸ்தானில் நடைபெறாவிட்டால் சாம்பியன்ஸ் டிராபி எங்கு நடைபெறும்?
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் வெற்றியை நாம் கொண்டாடினோம். ஏனெனில், ஆஸ்திரேலிய மண்ணில் நாம் தொடரை வெல்வோம் என யாரும் எதிர்பார்க்கவில்லை. உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி போன்ற பெரிய பட்டங்களை வென்று பாகிஸ்தான் அணியின் திறனை அனைவருக்கும் காட்ட வேண்டும். பல ஆண்டுகளாக வெல்லவில்லை என்ற மோசமான சாதனை தொடரும் நாடுகளில் நாம் வெற்றி பெற வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.