ரீஸ் டாப்லி படம்: இன்ஸ்டா / ரீஸ் டாப்லி
கிரிக்கெட்

ஐசிசி விதிகளை மீறியதால் இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளருக்கு அபராதம்!

இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லிக்கு ஐசிசி விதிகளை மீறியதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

DIN

இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லிக்கு ஐசிசி விதிகளை மீறியதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 1-2 என இழந்தது. தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

இந்தத் தொடரில் 2-0 என திடரில் முன்னிலை வகிக்கிறது இங்கிலாந்து அணி.

இதில் முதல் டி20 போட்டியில் இங்கிலாந்தின் வேகப் பந்துவீச்சாளர் ரீஸ் டாப்லி ஐசிசியின் விதி 2.2ஐ மீறியுள்ளார். அந்த விதியின்படி, “சர்வதேச போட்டிகளில் ஆடுகளத்தின் பொருள்களையோ அல்லது கிரிக்கெட் உபகரணங்களையோ, ஆடைகளையோ அவமதித்தால் அபராதம்” கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. கடுப்பாக இந்த ரீஸ் டாப்லி நாற்காலியை எடுத்து படிக்கட்டின் கைப்பிடிகளை ஓங்கி அடித்தார்.

இதற்காக போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 24 மாதங்களில் முதல்முறையாக ஒரு டீமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அபராதத்தை ரீஸ் டாப்லி ஏற்றுக்கொண்டார். ஐசிசியின் லெவல் 1 விதி மீறிலால் குறைந்தபட்ச அபராதமே விதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 50 சதவிகிதம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் ஒன்று அல்லது இரண்டு டீமெரிட் புள்ளிகளும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

SCROLL FOR NEXT