சதம் விளாசிய மகிழ்ச்சியில் சஞ்சு சாம்சன், திலக் வர்மா 
கிரிக்கெட்

23 சிக்ஸர்கள்... சதம் விளாசிய சஞ்சு சாம்சன், திலக் வர்மா!

சஞ்சு சாம்சன், திலக் வர்மாவின் அதிரடியான சதங்களால் இந்திய அணி 283 ரன்கள் குவித்துள்ளது.

DIN

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி சஞ்சு சாம்சன், திலக் வர்மாவின் அதிரடியான சதங்களால் 283 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டி20 போட்டி ஜோகன்ஸ்பெர்க்கில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது.

சதம் விளாசிய சஞ்சு சாம்சன், திலக் வர்மா

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். தொடக்க வீரர்கள் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 18 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அதன் பின், சஞ்சு சாம்சனுடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார்.

இந்த இணை அபாரமாக விளையாடி தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சாளர்களை திணறடித்தனர். சாம்சன் மற்றும் திலக் வர்மா இருவரும் சிக்ஸர் மழை பொழிந்தனர். ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரிகள் வந்த வண்ணமே இருந்தது. அதிரடியாக விளையாடி சிக்ஸர் மழையை பொழிந்த இருவரும் சதம் விளாசி அசத்தினர். சஞ்சு சாம்சன் 51 பந்துகளில் சதமடித்து அசத்தினார். திலக் வர்மா 41 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்.

இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 283 ரன்கள் எடுத்துள்ளது. சஞ்சு சாம்சன் 56 பந்துகளில் 109 ரன்கள் (6 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள்) எடுத்தும், திலக் வர்மா 47 பந்துகளில் 120 ரன்கள் (9 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள்) எடுத்தும் கடைசி வரை களத்தில் இருந்தனர். இந்தப் போட்டியில் இந்திய அணி 23 சிக்ஸர்களை விளாசியுள்ளது.

284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி களமிறங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இளைஞா் தற்கொலை

அயோத்தியில் காஞ்சி சங்கர மட சாலைக்கு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பெயா்

ராணுவ வீரருக்கு மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு

கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திய இளைஞா் கைது

இரகுநாதபுரம் கிராமத்தில் ரூ.1.22 கோடியில் சாலைப் பணி

SCROLL FOR NEXT