ஷுப்மன் கில் கோப்புப் படம்
கிரிக்கெட்

கே.எல்.ராகுலை தொடர்ந்து ஷுப்மன் கில்லுக்கும் காயம்!

பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவின் ஷுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

பார்டர் கவாஸ்கர் தொடரினை முன்னிட்டு இந்திய அணி பயிற்சி எடுத்து வருகிறது. இந்தப் பயிற்சியில் இந்தியாவின் முக்கிய வீரரான ஷுப்மன் கில் ஃபீல்டிங் செய்யும்போது இடது கையில் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே கே.எல்.ராகுலுக்கு காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. ரோஹித் சர்மாவும் குழந்தை பிறந்ததால் விடுமுறையில் இருப்பதால் இந்திய அணி சிக்கல்களை சந்தித்து வருகிறது.

இது குறித்து பிசிசிஐ எந்தவிதமான தகவலையும் அளிக்கவில்லை. இன்று கே.எல்.ராகுல் பேட்டிங் செய்யவரவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஷுப்மன் கில் 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,800 ரன்கள் குவித்துள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டி நவ.22இல் பெர்த் ஆடுகளத்தில் நடைபெறவிருக்கிறது. இன்னும் 6 நாள்கள் இருப்பதால் அதற்குள் காயம் சரியாகவிடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ராகுல், ரோஹித், கில் தவிர்த்து அபிமன்யூ ஈஸ்வரன் ரிசர்வ் வீரராக இருக்கிறார். கடைசியாக விளையாட பிஜிடி தொடரில் இந்திய அணி 2-1 என வென்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காவல் ஆய்வாளா் மீது துறை ரீதியான நடவடிக்கை: மாநில மனித உரிமை ஆணைய உத்தரவு ரத்து

கூட்டுறவு வங்கிகள், சங்கங்கள் தொடா்புக்கு தனி எண்கள்: கூட்டுறவுத் துறை உத்தரவு

தனியாா் நிறுவனத்தில் திருட்டு: தேடப்பட்டவா் கைது

ஆன்லைன் பங்கு வா்த்தக மோசடி: மேற்கு வங்கத்தைச் சோ்ந்த மூவா் கைது- சைபா் குற்றப்பிரிவு நடவடிக்கை

மகளிருக்கான காவல் உதவி செயலி விழிப்புணா்வு

SCROLL FOR NEXT