ரிக்கி பாண்டிங்  படம் | ஐசிசி
கிரிக்கெட்

உலக விளையாட்டுகளிலே முக்கியமானதாக மாறியுள்ளது..! பிஜிடி தொடர் குறித்து ரிக்கி பாண்டிங்!

இந்தியா ஆஸ்திரேலியா மோதும் டெஸ்ட் தொடர் குறித்து முன்னாள் ஆஸி. வீரர் ரிக்கி பாண்டிங் பேசியதாவது..

DIN

ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் போட்டி மிகவும் பிரபலமானது. 142 வருடங்களில் 345 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் ஆஸி. 142 போட்டிகளிலும் இங்கிலாந்து 110 போட்டிகளிலும் வென்றுள்ளன.

அதேவேளையில் இந்தியா - ஆஸி. மோதும் டெஸ்ட் போட்டி பார்டர் - கவாஸ்கர் கோப்பை என அழைக்கப்படுகிறது. 1996-97இல் இந்தப் போட்டிகள் தொடங்கின. இதுவரை 24 போட்டிகளில் இந்தியாவும் 20 போட்டிகளில் ஆஸி.யும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் சுனில் கவாஸ்கர், ஆஸி.யின் ஆலன் பார்டர் இருவரும் 10,000 ரன்கள் கடந்ததன் நினைவாக இந்தப் போட்டிக்கு பார்டர் - கவாஸ்கர் எனப் பெயர் வந்தது.

நவ.22இல் முதல் போட்டி தொடங்குகிறது. இது குறித்து முன்னாள் கேப்டனும் ஆஸி. வீரருமான ரிக்கி பாண்டிங் கூறியதாவது:

ஆஷஸ் டெஸ்ட்டுக்கு நிகர்

ஆஷஸ் டெஸ்ட் தொடர் போலவே பார்டர் - கவாஸ்கர் தொடரும் பிரபலமானது. நாம் எல்லாருமே இந்தப் போட்டிக்காக காத்திருக்கிறோம்.

முன்னாள் வீரராகவும் வர்ணனையாளராகவும் இருப்பதால் இந்த இரண்டு அணிகளும் களத்தில் சென்று கடினமாக விளையாடி 5 போட்டிகள் முடிவில் யார் வெல்கிறார்கள் என்பதைப் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்.

உலக விளையாட்டுகளிலே முக்கியமானது

இந்தப் போட்டிகளை மசாலா என்ற வார்த்தையினால் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால், அதேவேளையில் உலகத்தின் சிறந்த இரண்டு அணிகள் மோதி, இரண்டு அணிகளும் ஒரு அங்குலம்கூட விட்டுக்கொடுக்காமல் விளையாடுவதை எதிர்பார்க்கிறேன்.

5 போட்டிகளில் ஒரு அங்குலம்கூட விட்டுக்கொடுக்காமல் ஒரு போட்டியிலும் தோல்வியை சந்திக்காமல் விளையாட இரண்டு அணிகளும் ஆயுத்தமாகியிருக்கிறது.

கிரிக்கெட்டில் மிகப்பெரிய ரிவால்வரி அணியான இரண்டு அணிகள் மோதுவதன் அழகே இதுதான். இந்தத் தொடர் கிரிக்கெட்டில் மட்டுமல்ல உலக விளையாட்டுகளிலே மிக முக்கியமான போட்டியாக உருவாகியுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT