நாதன் மெக்ஸ்வீனி (கோப்புப் படம்) படம் | ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
கிரிக்கெட்

டேவிட் வார்னரைப் போல மெக்ஸ்வீனி விளையாட தேவையில்லை: பாட் கம்மின்ஸ்

டேவிட் வார்னரின் ஸ்டிரைக் ரேட்டில் மெக்ஸ்வீனி விளையாடத் தேவையில்லை என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

DIN

டேவிட் வார்னரின் ஸ்டிரைக் ரேட்டில் மெக்ஸ்வீனி விளையாடத் தேவையில்லை என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நாளை (நவம்பர் 22) முதல் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், டேவிட் வார்னரின் ஸ்டிரைக் ரேட்டில் மெக்ஸ்வீனி விளையாடத் தேவையில்லை என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

பாட் கம்மின்ஸ் (கோப்புப் படம்)

இது தொடர்பாக பாட் கம்மின்ஸ் பேசியதாவது: டேவிட் வார்னர் இடத்தை நிரப்புவது மிகவும் கடினம். அவருக்குப் பதிலாக தொடக்க ஆட்டக்காரர் இடத்தில் விளையாடவுள்ள நாதன் மெக்ஸ்வீனி அவரது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது மிகவும் முக்கியம். அவரது இயல்பான ஆட்டம் அப்படி இல்லாத பட்சத்தில், அவர் டேவிட் வார்னரைப் போல 80 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடத் தேவையில்லை. உஸ்மான் கவாஜா மற்றும் நாதன் மெக்ஸ்வீனி இருவரும் சிறப்பாக செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அவர்கள் இருவரும் குயின்ஸ்லாந்துக்காக தொடக்க ஆட்டக்காரர்களாக இணைந்து விளையாடியுள்ளனர் என்றார்.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் டேவிட் வார்னர் ஓய்வு பெற்ற நிலையில், பார்டர் - கவாஸ்கர் தொடருக்கான தொடக்க வீரராக நாதன் மெக்ஸ்வீனியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அண்மையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அணுசக்தி திட்டம்: ஈரானுக்கு பாகிஸ்தான் ஆதரவு

லாட்டரி விற்றவா் கைது

தேசிய தற்காப்புக்கலை, யோகா போட்டிகள் 1900 மாணவ- மாணவிகள் பங்கேற்பு

முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டம்! இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்

வேளாங்கண்ணிக்கு மும்பையிலிருந்து சிறப்பு ரயில்

SCROLL FOR NEXT