ஸ்டார்க்கிடம் வம்பிழுத்த இந்திய வீரர் ஜெய்ஸ்வால் படம்: ஏபி
கிரிக்கெட்

ஸ்டார்க்கிடம் வம்பிழுத்த இந்திய வீரர் ஜெய்ஸ்வால்..! வைரலாகும் விடியோ!

ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கிடம் பேசிய இந்திய வீரர் ஜெஸ்வால் விடியோ வைரலாகி வருகிறது.

DIN

இந்தியா ஆஸிக்கு இடையேயான முதல் டெஸ்ட் பெர்த்தில் நேற்று (நவ.22) தொடங்கியது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 150க்கு ஆல் அவுட்டானது. இதனைத் தொடர்ந்து விளையாடிய ஆஸி. 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

தற்போது, இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 132 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடி வருகிறது.

ஸ்டார்க் பேட்டிங் செய்யும்போது இந்திய பந்துவீச்சாளர் ஹர்சித் ராணாவிடம், ”உன்னைவிட என்னால் வேகமாக பந்துவீச முடியும். நினைவாற்றலும் அதிகம்” என்றார். இருவரும் கேகேஆர் அணியில் விளையாடியுள்ளார்கள்.

ஹர்சித் ராணா - ஸ்டார்க் உரையாடல்.

தற்போது ஜெய்ஸ்வால் மிட்செல் ஸ்டார்க் ஓவரில் அதிரடியாக விளையாடியது மட்டுமல்லாமல் 142 கி.மீ/மணி வேகத்தில் வீசிய ஸ்டார்க்கிடம், “உங்களது பந்து மிக மெதுவாக வருகிறது” எனக் கூறியுள்ளார்.

இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எண்ணங்கள்... வண்ணங்கள்...

வரப்பெற்றோம் (03.11.2025)

கனடாவின் தற்காலிக விசா ரத்து? 74% இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

SCROLL FOR NEXT