படம் | சிஎஸ்கே (எக்ஸ்)
கிரிக்கெட்

ஐபிஎல் மெகா ஏலம்: சிஎஸ்கே முழு அணி விவரம்!

ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் விவரம்.

DIN

ஐபிஎல் மெகா ஏலத்தில் முதல் அணியாக சிஎஸ்கே 25 வீரர்கள் கொண்ட அணியை கட்டமைத்துள்ளது.

ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று (நவம்பர் 24) தொடங்கியது. முதல் நாளில் ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இரண்டாம் நாளான இன்றும் ஏலத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.

ஒரு அணி குறைந்தபட்சம் 18 வீரர்களையும், அதிகபட்சமாக 25 வீரர்களையும் பெற்றிருக்கலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்துக்கு முன்பாக 5 வீரர்களை தக்கவைத்தது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், எம்.எஸ்.தோனி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா மற்றும் மதீஷா பதிரானாவை தக்கவைத்தது.

5 வீரர்கள் தக்கவைக்கப்பட்ட நிலையில், ஏலத்தின் மூலமாக சிஎஸ்கே 20 வீரர்களை வாங்கியுள்ளது.

சிஎஸ்கே முழு வீரர்கள் பட்டியல்

ருதுராஜ் கெய்க்வாட், எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, மதீஷா பதிரானா, டெவான் கான்வே, ராகுல் திரிபாதி, ரச்சின் ரவீந்திரா, ரவிச்சந்திரன் அஸ்வின், கலீல் அகமது, நூர் அகமது, விஜய் சங்கர், சாம் கரண், ஷாய்க் ரஷீத், அன்சுல் கம்போஜ், முகேஷ் சௌத்ரி, தீபக் ஹூடா, குர்ஜாப்னித் சிங், நாதன் எல்லிஸ், ஜேமி ஓவர்டான், கமலேஷ் நாகர்கோட்டி, ராமகிருஷ்ணா கோஷ், ஸ்ரேயாஸ் கோபால், வன்ஷ் பேடி மற்றும் ஆண்ரே சித்தார்த்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேரூராட்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் சோதனை: கணக்கில் வராத ரூ.5.80 லட்சம் பறிமுதல்

காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம் அமலானால் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடு நீங்கும்: அமைச்சா் சக்கரபாணி

கிரிவல பக்தா்கள் வேன் கவிழ்ந்து விபத்து: 11 போ் காயம்

மாணவா்களின் படைப்பாற்றலை வளா்ப்பதே தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய சாராம்சம்: ஆளுநா் ஆா்.என்.ரவி

திமுகவிற்கு எதிராக ஓா் அணியில் நின்று நல்லாட்சி அமைப்பதே இன்றைய தேவை: கே.பி. ராமலிங்கம் அழைப்பு

SCROLL FOR NEXT