ஆஸ்திரேலிய அணி  படம்: ஏபி
கிரிக்கெட்

2ஆவது டெஸ்ட்: ஆஸி. அணி அறிவிப்பு..! அறிமுகமாகும் வரலாற்று நாயகன்?

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஆஸி. மோசமான தோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து 2ஆவது டெஸ்ட் போட்டி வரும் டிச.6ஆம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது.

இந்தப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் புதியதாக ஆல் ரவுண்டர் வெப்ஸ்டர் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸி. ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக பிளேயிங் லெவனில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணி

பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலீஷ் (விக்கெட் கீப்பர்), உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், நாதன் லயன், மிட்செல் மார்ஷ், நாதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்.

அறிமுகமாகும் வரலாற்று நாயகன்

புதியதாக சேர்க்கப்பட்டுள்ள வெப்ஸ்டர் கடந்த சீசனில் 900 ரன்கள், 30 விக்கெட்டுகள் எடுத்து 132 வருட வரலாற்று சாதனையை சமன் செய்தார். இதற்கு முன்பாக சர் கேரி சோபர்ஸ் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்ஸ்டர்

தற்போதைய சீசனில் 448 ரன்கள், 16 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதில் இந்தியா ஏ அணிக்கு எதிராக 61 நாட் அவுட், 46 நாட் அவுட் உடன் 3-19, 3-49 ஆகியவையும் அடங்கும்.

ஆஸி. முன்னாள் வீரரும் இவரை நிரந்தரமாக அணியில் சேர்க்க வேண்டுமென பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

புதிய சொற்களைக் கண்டறிவோம்

புதியதொரு அத்தியாயம்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

SCROLL FOR NEXT