கிரிக்கெட்

டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை; அணியில் 11 பேரும் பந்துவீச்சு!

மணிப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் தில்லி அணி புதிய சாதனை படைத்துள்ளது.

DIN

சையத் முஷ்டாக் அணி தொடரில் மணிப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் தில்லி அணி புதிய சாதனை படைத்துள்ளது.

மணிப்பூர் - தில்லி அணிகள் மோதிய போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற மணிப்பூர் கேப்டன் ரெக்ஸ் ராஜ்குமார் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய மணிப்பூர் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் அகமது ஷா 32 ரன்கள் எடுத்தார்.

தில்லி அணி தரப்பில் ஹர்ஷ் தியாகி, திக்வேஷ் ரதி இருவரும் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய தில்லி அணி 18.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது. தில்லி அணியில் யாஷ் துல் 58 ரன்கள் விளாசினார். அதில், 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடங்கும்.

இந்தப் போட்டியில் தில்லி அணி சுவாரசியாமான சாதனை ஒன்று படைத்துள்ளது. தில்லி அணியில் உள்ள 11 பேரும் பந்து வீசி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளனர். வழக்கமாக அணியில் 9 பேர் பந்துவீசுவார்கள். ஆனால், தில்லி அணியில் கேப்டனும், விக்கெட் கீப்பருமான ஆயுஸ் பதோனி உள்பட அணியில் உள்ள அனைவரும் கட்டுக்கோப்பாக பந்து வீசி அசத்தினர்.

2 ஓவர்கள் பந்துவீசிய ஆயுஷ் பதோனி முதல் ஓவரில் 1 விக்கெட் வீழ்த்திய நிலையில் இரண்டாவது ஓவரை மெய்டானாக்கி அசத்தினார்.

இதற்கு முன்னதாக, 2002 ஆம் ஆண்டு கங்குலி தலைமையிலான இந்திய அணியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் 10 வீரர்களுக்கும் பந்துவீசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல்! காங்கிரஸை மிரட்டி முதல்வா் வேட்பாளரானாா் தேஜஸ்வி: பிரதமா் மோடி

வேலூா், ராணிப்பேட்டைக்கு இன்று துணை முதல்வா் வருகை!

ரூ.14 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட மூத்த பெண் நக்ஸல் சரண்!

கோயில் குளத்தில் மூழ்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு: முதல்வா் நிதியுதவி

சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பின்ஸ் ஒப்பந்தம்!

SCROLL FOR NEXT