டிம் சௌதி 
கிரிக்கெட்

இலங்கையுடனான தோல்வி எதிரொலி... கேப்டன் பொறுப்பிலிருந்து டிம் சௌதி ராஜிநாமா!

நியூசிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து டிம் சௌதி ராஜிநாமா செய்துள்ளார்.

DIN

ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி விளையாடியபோது கேன் வில்லியம்சன், டிம் சௌதி இருவருக்கும் 100வது டெஸ்ட் போட்டி என்பதால் ஐசிசி சிறப்பு போஸ்டரை வெளியிட்டு கௌரவித்தது.

2022இல் கேன் வில்லியம்சனுக்கு பதிலாக டிம் சௌதி டெஸ்ட் அணிக்கு கேப்டனாக பதவியேற்றார்.

இலங்கை அணியுடனான 0-2 என்ற தோல்விக்குப் பிறகு தனது கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.

2022இல் டிம் சௌதி கேப்டன் ஆன பிறகு 14 டெஸ்ட் போட்டிகளில் தலைமையேற்று 6 போட்டிகளில் வெற்றி, 6 போட்டிகளில் தோல்வியும் 2 போட்டிகளில் டிராவிலும் முடிவடைந்துள்ளன.

இந்நிலையில் இலங்கையுடன் மோசமாக தோல்வியுற்று (0-2) தொடரை இழந்தது. அதனால் கேப்டன்சியில் இருந்து விலகினார் டிம் சௌதி. 35 வயதாகும் டிம் சௌதி 102 டெஸ்ட்டில் விளையாடி 382 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

டிம் சௌதிக்குப் பிறகு டாம் லாதம் கேப்டனாக தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

டாம் லாதம் ஏற்கனவே 2020-2022 சீசன்களில் 9 முறை கேப்டனாக செயல்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுடனான 3 டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி அக்.16 முதல் நவ.5ஆம் தேதி வரை விளையாடவிருக்கிறது. அதற்கான நியூசி. அணியை விரைவில் அறிவிக்கப்படவுள்ளார்கள்.

இந்த நிலையில் கேப்டன்சி மாற்றம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

SCROLL FOR NEXT